IPL 2025: ஷாருக் கான் அறிமுகப்படுத்த.. ஷ்ரேயா கோஷல் பாட.. திஷா படானி ஆட.. கோலாகல தொடக்க விழா!

Mar 22, 2025,06:21 PM IST

கொல்கத்தா: ஐபிஎல் 2025 தொடரின் கோலாகலமான தொடக்க விழா இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. 


2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் இன்று தொடங்கியது. இது 18வது சீசன் போட்டித் தொடராகும். வழக்கம் போல கோலாகலமான தொடக்க விழாவுடன் ஐபிஎல் தொடர் தொடங்கியுள்ளது.


கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த தொடக்க விழாவை நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக் கான் தொடங்கி வைத்தார். இதையடுத்து பாடகி ஷ்ரேயா கோஷல் குழுவினரின் பாடல் இடம் பெற்றது.  திரைப்படப் பாடல்களில் தொடங்கி வந்தே மாதரத்துடன் தனது பாடல் நிகழ்ச்சியை நிறைவு செய்தார் ஷ்ரேல்யா கோஷல்.  இதைத் தொடர்ந்து,திஷா பதானியின் நடன நிகழ்ச்சி தொடங்கியது. 




முதல் போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு மோதல்


கண்கவர் தொடக்க விழாவைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முதல் போட்டியில் மோதவுள்ளன.


இரு அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் கடந்த 18 வருடமாக ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. அதேசமயம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது. நடப்பு சாம்பியனாகவும் கொல்கத்தா உள்ளது. 


ஐபிஎல் தொடக்கப் போட்டிகளில் இதுவரை 7 முறை ஆடியுள்ள கொல்கத்தா அதில் 6 முறை வென்று அசத்தலான சாதனையை வைத்துள்ளது. அதேபோல ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக 4 முறை அது தொடக்கப் போட்டிகளில் ஆடி வென்றுள்ளது.




2008ம் ஆண்டு நடந்த முதல் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலும் கூட கொல்கத்தா - பெங்களூரு அணிகள்தான் மோதின. அப்போட்டியில் கொல்கத்தா அணி 222 ரன்களைக் குவித்தது. மெக்கல்லம் 158 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  அப்போட்டியில் 140 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வென்றது.  இதுவரை கொல்கத்தா பெற்ற வெற்றிகளிலேயே இதுதான் பெரிதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


அதேபோல 2017ம் ஆண்டு இதே ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது பெங்களூரு. ஐபிஎல் தொடர்களில் ஒரு அணி பெற்ற குறைந்தபட்ச ஸ்கோராக இன்றளவும் இதுவே உள்ளது.


இன்றைய போட்டியில் வெல்லப் போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!

news

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!

news

டிரம்ப் வரியால் விபரீதம்..பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு..2 நாட்களில் ரூ. 9.69 லட்சம் கோடி இழப்பு

news

அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!

news

திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!

news

கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!

news

விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது

news

திமுக - தேமுதிக கூட்டணிக்கு வேட்டு வைக்குமா.. தனலட்சுமி சீனிவாசன் கிட்னி முறைகேடு விவகாரம்?

news

Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?

அதிகம் பார்க்கும் செய்திகள்