IPL 2025.. பிரித்து மேய்ந்த பில் சால்ட்.. வச்சு செய்த விராட் கோலி.. கொல்கத்தாவுக்கு முதல் தோல்வி!

Mar 22, 2025,10:52 PM IST

கொல்கத்தா: ஐபிஎல் 2025 தொடரின்  முதல் போட்டியே பட்டையைக் கிளப்பி விட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் செய்த அதகள பேட்டிங்கை முதலில் ஒடுக்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பின்னர் சேசிங்கில் கொல்கத்தாவை வச்சு செய்து விட்டது. கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் வைத்தே சிறப்பான சம்பவத்தை நிகழ்த்தி விட்டது பெங்களூரு அணி.


கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று கோலாகலமான ஐபிஎல் 2025 தொடக்க விழா நடைபெற்றது. இதையடுத்து முதல் போட்டி தொடங்கியது. நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், இதுவரை சாம்பியன் பட்டம் பெறாமல் தவித்துக் கொண்டிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.



ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படீதார் டாஸ் வென்றார். தனது அணி முதலில் பந்து வீச்சை எடுப்பதாக அவர் அறிவித்தார். இதையடுத்து அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட் செய்தது. முதல் விக்கெட்டாக குவின்டன் டி காக் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.


ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த அஜிங்கியா ரஹானேவும், சுனில் நரீனும் சேர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர்களை பிரித்து மேய்ந்து விட்டனர். குறிப்பாக கேப்டன் ரஹானே அடித்து நொறுக்கி விட்டார். 31 பந்துகளைச் சந்தித்த ரஹானே 56 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். சுனில் நரீன் 44 ரன்களைக் குவித்தார்.




இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் தடுமாறியது பெங்களூரு அணி. ஆனால் இந்த ஜோடியை வெற்றிகரமாக பிரித்து வைத்தார் க்ருனால் பாண்ட்யா. அதன் பிறகு பெரிய பார்ட்னர்ஷிப் அமையாமல் பெங்களூரு பந்து வீச்சாளர்கள் பார்த்துக் கொண்டனர். இதன் விளைவாக, படு வேகமாக சீறிக் கொண்டிருந்த கொல்கத்தா அணி பெட்டிப் பாம்பாக மாறிப் போனது.


இடையில் ஆங்கிரிஷ் ரகுவன்ஷி மட்டும் சற்று சிறப்பாக ஆடி 30 ரன்களைச் சேர்த்தார். மற்றவர்கள் சொதப்பி விட்டனர். இதனால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களுடன் நின்று விட்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.



பெங்களூரு அணி தரப்பில் க்ருனால் பாண்ட்யா சிறப்பாக பந்து வீசி3 விக்கெட்களையும், ஜோஷ் ஹேசல்வுட் 2 விக்கெட்களையும் சாய்த்தனர். யாஷ் தயாள், ரசீக் சலாம், சுயாஸ் சர்மா ஆகியோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.


இதையடுத்து தனது சேசிங்கைத் தொடங்கிய பெங்களூரு அணியின் தொடக்கமே கோலாகலமாக அமைந்தது. முதல் பந்தையை பவுண்டரிக்கு விரட்டினார் பில் சால்ட். அடுத்தடுத்த அவர் காட்டிய சரவெடியைப் பார்த்து விராட் கோலியே கூட ஆச்சரியமானார். பில் சால்ட்டுக்கு இணையாக விராட் கோலியும் அவ்வப்போது அனலைக் கக்க கொல்கத்தா பவுலர்கள் நொந்து போய் விட்டனர். முதல் பந்திலிருந்தே அதிரடியாக ஆடி வந்த பெங்களூரு அணி வெறும் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கைத் தொட்டு தனது முதல் வெற்றியை சுவைத்தது.


16.2 ஓவர்களில் 177 ரன்களை பெங்களூரு அணி எடுத்து வெற்றி பெற்றது.  பில் சால்ட் 31 பந்துகளில் 56 ரன்களை குவித்தார். விராட் கோலி ஆட்டமிழக்காமல் 59 ரன்களை விளாசினார். கேப்டன் படீதார் 16 பந்துகளில் 34 ரன்களை வெளுத்தார்.


சென்னை போட்டி நாளை


நாளை ஐபிஎல் தொடரில் 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் முக்கியமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி போட்டி இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்