கொல்கத்தா: ஐபிஎல் 2025 தொடரின் முதல் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே வரும் மார்ச் 22ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த முதல் போட்டியுடன் தொடக்க விழாவும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
முன்பெல்லாம் கிரிக்கெட் தொடர்கள் என்றாலே உலகக் கோப்பை போட்டிகள், இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிப்பது வழக்கம். ஆனால் அதை மாற்றிப் போட்டது பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள். உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களிடயே புகழ் பெற்றதாக ஐபிஎல் மாறிப் போயுள்ளது.
ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளில் இடம்பெற்றுள்ள மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி, சிவம் டூபே, ரவீந்திர ஜடேஜா போன்ற கிரிக்கெட் வீரர்களால் ஐபிஎல் தொடர்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் இவர்களின் தனித்திறமை குறித்தும் ரசிகர்களிடையே ஆர்வமும் அதிகரித்து வருகிறது. போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றாலும் ரசிகர்கள் கலாய்த்தே தள்ளி விடுகின்றனர். அந்த அளவிற்கு இந்த தொடர் அனைத்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூர் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. இந்த முறையாவது பெங்களூர் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவி தான் வருகிறது. இதனால் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் டி20 தொடர் ஏலம் ஆரம்பிக்கும்போதே பெங்களூர் அணி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.
இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு ஆண்களுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் என தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்புச் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இடையேயான முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 22 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் மே 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
{{comments.comment}}