மும்பை: ஐபிஎல் விளையாட்டு போட்டியை பேர்பிளே செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பி ஏப்ரல் 29ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த வருடம் 2023ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை வியாகாம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. அதனை சட்ட விரோதமாக, பேர்பிளே என்ற செயலியின் வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தினால் வியாகாம் நிறுவனத்திற்கு பல கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து போலீஸில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக பேர்ப்ளே செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களின் மீது விசாரணை மேற்கொண்டது. அதன் படி கடந்த 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் சஞ்சய் தத்துக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். அன்று ஆஜராகாத சஞ்சய் தத் அன்று தான் இந்தியாவிலேயே இல்லை என்றும், அதற்கு பதிலாக வேறு ஒரு தேதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் ஏப்ரல் 29ம் தேதி நடிகை தமன்னாவை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஹைக்கூ திருவிழா
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
வெந்தயக் களி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!
உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
{{comments.comment}}