கண்ணீர் சிந்தும் பூமி

Sep 21, 2026,02:55 PM IST

- தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச்செல்வி 


நீர் இன்றி வாடுகிறான் உழவன்.!

நிலம் தாகத்தில்  சிந்தும் கண்ணீர்.! 


வெள்ளப் பெருக்கால் அழியும் நிலம்.!

மக்களின் பெருக்கால்  சரியும் மண்.!


இயற்கை அன்னையின் கதறல் சத்தம்,

இன்னும் கேட்கலயா மனிதனின் காதில் ?


நெகிழிப் பையால் மண்ணின் வளம்,

நிரந்தர மலடாகிப்  போவது  தெரியுமா.!




மரங்கள் வளர்த்து பூமியைக்  காப்போம்.!

மக்கா நெகிழி இல்லா உலகாய் மாற்றுவோம்! 


நீர் சேமித்து நிலத்தைக் காப்போம்.!

நின்உழவர் கண்ணீர் துடைத்து நிற்போம்!


பசுமை பூமி மீண்டும் அமைப்போம்.!

பார் சிறக்க புவிக்கு  உயிர் கொடுப்போம்! 


(சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா ‌ போன்ற 30 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்