சென்னை: அதிமுக ஒரு பிரிந்து போன கூடை, திரிந்து போன பால்.. அதை வைத்து காபியோ,டீயோ போட முடியாது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
அமைச்சர் கூற்றுக்கு அதிமுகவினர் பதில் கொடுத்து வருகின்றனர். அமைச்சரின் டிவீட்டில் சூடான விவாதம் ஓடிக் கொண்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சசிகலா தலைமையில் அணி திரண்டது. ஆனால் திடீர் திருப்பமாக ஓ.பன்னீர் செல்வம் தனியாக பிய்த்துக் கொண்டு போனதால், சசிகலாவுக்கு சிக்கல் வந்தது. தொடர் சோகமாக அவருக்கு ஊழல் வழக்கில் சிறை தண்டனை கிடைத்து பெங்களூரு சிறைக்குப் போய் விட்டார். இதனால் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி வசம் போனது.
தினகரன் தனித்து விடப்பட்டார், தனிக் கட்சி கண்டார். எடப்பாடியுடன் பின்னர் ஓ.பன்னீர் செல்வம் கை கோர்த்தார். இப்போது அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். ஆக மொத்தம் அதிமுக தற்போது பல துண்டுகளாக சிதறிப்போயுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் எடப்பாடி - ஓபிஎஸ் தலைமையில்தான் அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால் ஆட்சியைப் பறி கொடுத்தது. இருந்தாலும் 2வது இடத்தை பிடித்துக் கொண்டது.
தற்போது ஓ.பன்னீர்செல்வமும் பிரிந்து போய் விட்டதால் அதிமுகவின் தற்போதைய பலம் என்ன என்பது தெரியவில்லை. வருகிற லோக்சபா தேர்தலில்தான் உண்மையான பலத்தை நாம் அறிய முடியும். ஆனால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் வரவிருப்பதால் அந்தத் தேர்தலில் அதிமுகவின் பலத்தை அறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு கருத்தைக் கூற அது வாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது. அதிமுக குறித்து மனோ தங்கராஜ் போட்டுள்ள டிவீட்டில், அதிமுக வலுவான கட்சி என்பது அறியாமை. அது ஒற்றுமையாகவுமில்லை ஒரே கட்சியாகவுமில்லை. அது ஒரு பிரிந்து போன கூடை. அதில் எந்த பழத்தையும் வைத்து பாதுகாக்க முடியாது. அது திரிந்து போன பால். காபியோ டீயோ போட முடியாது. திமுக கொள்கை ரீதியாகக் கட்டமைக்கப்பட்டு வலுவான கூட்டணியுடன் இருக்கும் கட்சி என்று கூறியுள்ளார் மனோ தங்கராஜ்.
இதையடுத்து அதிமுகவினர் கொந்தளித்து பதில்கொடுத்து வருகின்றனர். ஒருவர், ஒவ்வொரு முறை திமுக ஆட்சியைப்பிடித்தபோதும் அடுத்தமுறை உங்கள் ஆட்சியை மக்கள் திருப்பிப்போட்டிருக்கிறார்கள்..அதிமுக வலிமையில்லையென்று கருதி நீங்கள் விளம்பர ஆட்சி நடத்தினால் தேர்தலில் மக்கள் தேடி அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள்.. இனி திமுக தோற்றால் ஏழேழு ஜென்மத்திலும் ஜெயிக்காது.. என்று தெரிவித்துள்ளார். இதேபோல பலரும் மனோ தங்கராஜின் கூற்றை மறுதலித்து கருத்து கூறி வருகின்றனர்.
எதுக்கு சண்டை.. ஈரோடு கிழக்கில் பார்த்து விடலாம்.. அதிமுக பலமாக இருக்கிறதா இல்லையா என்பதை.
கருப்புக் கொடி காட்டிய.. பாஜக இளைஞர் அணியினரை அருகே அழைத்து.. மிட்டாய் கொடுத்த ராகுல் காந்தி
காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை: மரங்கள் மாநாட்டில் தவெகவை தாக்கி பேசிய சீமான்
சஞ்சு சாம்சன் போவாருன்னு பார்த்தா.. ராகுல் டிராவிட் ராஜிநாமா.. என்ன நடக்குது?
அண்ணாமலை மற்றும் தவெக குறித்து விமர்சிக்க வேண்டாம்: அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே... சொன்னீங்களே செஞ்சீங்களா ?: நயினார் நாகேந்திரன் கேள்வி!
ஒரே மேடையில் அண்ணாமலை- இபிஎஸ்: எனது சகோதரர் அண்ணாமலை-இபிஎஸ்!
என்ன நடக்கிறது... கூட்டணி மாறுகிறதா?... தேஜ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்!
இந்தியப் பொருளாதாரம் 6.8% வரை உயரும்.. பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையில் இடியை இறக்கிய வாஷிங்டன் கோர்ட்.. வரி விதிப்பு செல்லாது!
{{comments.comment}}