- அஸ்வின்
நடனப்புயலாக, நடிகராக, இயக்குநராக வலம் வரும் பிரபுதேவா நடிக்கப் போகும் புதிய படம்தான் சிங்காநல்லூர் சிக்னல். வித்தியாசமான பெயர் மட்டுமல்ல, கதையும் கூட வித்தியாசமானது என்று சொல்கிறார்கள்.
பிரபுதேவா ஹீரோவாகவும், பவ்யா நாயகியாகவும் நடிக்கும் புதிய படம்தான் சிங்காநல்லூர் சிக்னல். பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தை ஜே. எம்.ராஜா எழுதி இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரபாகரன் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் லேபிள் என்ற படத்தையும் பிரபாகரன்தான் தயாரித்திருந்தார் என்பதால் சிங்காநல்லூர் சிக்னல் படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தின் முதல் லுக் போஸ்டரில் பிரபுதேவா சிக்னலில் டான்ஸ் ஆடுவது போல உள்ளது. மேலும் போக்குவரத்துக் காவலர் உடையிலும் அவர் இருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு சென்னை அண்ணாசாலையில் ஒரு போக்குவரத்துக் காவலர் இருந்தார். அவர் பணியாற்றும் ஸ்டைலே அலாதியாக இருக்கும். அதாவது டான்ஸ் ஆடுவது போலவே அவர் தனது வாகன ஒழுங்குபடுத்தலை மேற்கொள்வார்.
அந்த சமயத்தில் அது பெரும் வரவேற்பையும், ஆச்சரியத்தையும் பெற்றது. அந்த சமயத்தில்தான் பிரபுதேவாவும் பிரபலமாகி வந்தார். ஒரு அலை பரப்பிக் கொண்டிருந்தார். அவர் மீது இன்ஸ்பைர் ஆகித்தான் அந்தக் காவலர் அப்படி நடனமாடியே தனது பணியைச் செய்து பிரபலமானார். ஒரு வேளை அந்தக் காவலரை இன்ஸ்பிரேஷனாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
இருப்பினும் இதுவரை இப்படத்தின் கதைக் களம் குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனால் நிச்சயம் போக்குவரத்துக் காவலராக பிரபுதேவா நடிக்கிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}