சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் ஏறக்குறைய வெளியாகி விட்டன. இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் படி விஜய்யின் தவெக அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதை விட அதிர்ச்சி தரக்கூடியது தற்போது முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என சீனியர்கள் பலரும் தோல்வி அடைந்ததுடன், பல தொகுதிகளில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
திமுக.,வில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்டோர், அதிமுக.,வில் ஆர்.பி.உதயக்குமார், ஜெயக்குமார் உள்ளிட்ட சீனியர்கள் பலரும் தோல்வியை சந்தித்துள்ளனர். இவர்கள் அனைவரும் அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தொடர்ந்து பலமுறை எம்எல்ஏ.,க்களாக இருந்து, அமைச்சர்களாகவும் இருந்தவர்கள். இருந்தும் இந்த முறை தோல்வியை சந்தித்துள்ளதற்கு விஜய் அலை ஒரு காரணம் என்றாலும், எஸ்ஐஆர் மிகப் பெரிய காரணம் என சொல்லப்படுகிறது.

எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு தமிழகத்தில் ஏறக்குறை 1.5 கோடி போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதிகபட்சமாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1.75 லட்சம் போலி வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டது. இது போல் பல முக்கிய தொகுதிகளில் போலி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதும் அதிமுக, திமுக.,விற்கு விழும் பாரம்பரிய ஓட்டுக்கள் பறிபோனதால் இந்த முறை இரு கட்சிகளுமே மிகப் பெரிய அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது என சொல்லப்படுகிறது.
முகம் மலரோ தாமரைப்பூ.. மனம் மணமோ மல்லிகைப்பூ!
வேறு முகங்கள்!
நூலகமும் நானும்.. மயிலாப்பூர் முதல் பாஸ்டன் வரை!
அமைதியா இரு
Short Story by Sudha Thirunarayanan: பை!
தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை
பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
{{comments.comment}}