சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் (GOAT- The Greatest of All Times) படம் செப்டம்பர் 5ம் தேதியான நாளை ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் கதை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்காக எகிறி உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் கோட். இந்த படத்தில் விஜய் தவிர பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், அஜ்மல் அமீர், ஜெயராம், ஸ்நேகா, லைகா, மீனாட்சி செளத்ரி, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ரிலீசாக உள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வழக்கமாக எந்த பெரிய படம் அல்லது பெரிய ஸ்டார் படம் ரிலீசாக போகிறது என்றாலும் படத்தின் ரிலீசுக்கு முன்பு சோஷியல் மீடியாவில் தான் படத்தின் கதை பற்றிய தகவல்கள் கசிந்து பரபரப்பை கிளப்பும். ஆனால் கோட் படத்திற்கு சற்று வித்தியாசமாக படக்குழுவே படத்தின் கதை பற்றிய தகவல்கள் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும், படத்தின் பார்க்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.
கோட் படம் பற்றி டைரக்டர் வெங்கட் பிரபு கூறுகையில், சையின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள கோட் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். டி ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜய்யின் இளமை தோற்றத்தை உருவாக்கி உள்ளோம் என தெரிவித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறுகையில், இந்த படத்தில் விஜய் ரா ஏஜன்டாக நடித்துள்ளார். ஒரு வருட காலத்தில் ஒரு வேலையை முடிக்க வேண்டிய சிக்கலில் அவர் சிக்கிக் கொள்கிறார். இது முழுமையான ஆக்ஷன் என்டர்டைன்மென்ட் படமாக உருவாகி உள்ளது என தெரிவித்துள்ளார்.
படம் பற்றி மேலும் கூறிய அர்ச்சனா கல்பாத்தி, ரா ஏஜன்டான விஜய்யும் அவரது டீமும் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்கும் திட்டம் ஒன்று தவறாகி விடுகிறது. பல வருடங்களுக்கு பிறகு அது அவர்களுக்கு பிரச்சனையாக திரும்புகிறது. அந்த பிரச்சனைகளை சமாளித்து, அவற்றில் இருந்து எப்படி வெளி வருகிறார்கள் என்பது தான் படத்தின் கதை. தெரியாத கடந்த காலத்தின் நிழல்கள் மீண்டும் எழுகின்றன. பயங்கரவாதிகள் படையை அழித்து, மறைக்கப்பட்ட பல ரகசியங்கள் வெளிச்சத்திற்கு வருகிறது. அது ரா டீமின் பல நம்பிக்கைகளை உடைக்கிறது. இது தான் படத்தின் கதை என தெரிவித்துள்ளார்.
விஜய்யின் கோட் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம். இதில் கடைசி அரை மணி நேரம் செம திரில்லிங்காக, பரபரப்பாக இருக்கும் என சொல்லப்படுகிறது. படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்று அளித்துள்ளது. படத்தின் கதையை முழுமையாக சொல்வதற்கு 3 மணி நேரம் தேவைப்படுவதால் தான் இவ்வளவு நேரம் என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இருந்தாலும் படம் முழுவதும் ரசிகர்களை நொடிக்கு நொடிக்கு எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாகவே இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
"டிரம்ப் பெருங்கடல்" : பெருங்கடல்களின் பெயரை மாற்ற டொனால்ட் டிரம்ப் புதிய திட்டம்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி, முதல்வர் விஜய்க்கு எஸ்பி வேலுமணி நன்றி!
Navaratri 2026 Special: வருஷத்துக்கு நான்கு நவராத்திரி வரும்.. இது தெரியுமா உங்களுக்கு?
Cooking Tips: ராகி + பால் + நட்ஸ் கஞ்சி.. healthy food.. Tips by G Yasmin!
நம் மகளின் புன்னகையில் நல்வாழ்வு மலரட்டும்!
D Rajitha Poem.. கிடைக்காத பேருந்து!
நவராத்திரி ஸ்பெஷல்.. இன்றும் நாளையும் என்னவெல்லாம் செய்ய வேண்டும்.. Full List!
Thentamil Editorial: பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் நவராத்திரி.. மைசூர் முதல் குலசேகரப்பட்டினம் வரை
மகன் .. அழகிய செடிக்கு மலரை அளிக்கும் உயிர் படைப்பு!
{{comments.comment}}