சென்னை: ஒரு தவறு செய்தால்.. அதை தெரிந்து செய்தாலும் விடமாட்டேன் ..என வில்லனுக்கும், நாயகனுக்கும் இடையில் நடக்கும் தேர்தல் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது பூகம்பம் திரைப்படம்.
பன்முகத் திறமை கொண்ட பிரபல கராத்தே வீரர் இசாக் உசைனி பூகம்பம் படத்திற்கு திரைக்கதை, வசனம் ,எழுதி, இயக்கி, தயாரித்தும் உள்ளார். இது மட்டுமல்லாமல் இப்படத்தின் நாயகனாகவும்
நடித்து அசத்தியுள்ளார். இதில் இஷாக் உசைனி, தில்சானா ,ஹேமா ரிஷ்ஷத் மற்றும் பலர் நடித்துள்ளனர் . இப்படத்திற்கு தாமஸ்ரத்தினம் இசையமைத்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமா பக்கம் வந்துள்ளார் இசாக் உசேனி. சிறந்த கராத்தே வீரரான அவர் பல படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.
சரி பூகம்பம் படத்தில் என்ன ஸ்பெஷல் என்று இசாக் உசேனியிடம் கேட்டபோது உற்சாகமானார் மனிதர்..
"இப்படத்தின் வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களான, ஒருவர் உன்னை காதலித்து உன்னை திருமணம் செய்வேன். உன் கருவை சுமப்பேன். ஆனால் உன்னோடு வாழ மாட்டேன் என கூறும் ஒரு பெண்
மற்றும் தேர்தலில் வெற்றி பெற்று பதவி பெற வேண்டும் என்ற வெறியுடன் அரசியல்வாதியாக மற்றொருவர் என மாறுபட்ட கதைகளத்தில் நடித்துள்ளனர்.
இவர்களுக்கிடையே வெளிநாட்டில் இருந்து வரும் நாயகன் எடுக்கும் அதிரடி முடிவு என்ன என்பதே பூகம்பம் படத்தின் மையக் கருத்தாகும்" என்றார்.
இசாக் உசைனி இப்படத்தைப் பற்றி மேலும் கூறுகையில், பிச்சை எடுப்பதில் பலவகை உண்டு. இதில் தேர்தல் பிச்சையை பற்றி கூறியிருக்கிறேன். தமிழகத்திலும், ஐரோப்பிய நாடுகளிலும், குறிப்பாக போலந்து நாட்டில் அதிகமாக படபிடிப்பு நடத்தி இருக்கிறேன்.
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தாலும் விடமாட்டேன் என்று சொல்லி வில்லனுக்கும் நாயகிக்கும் இடையில் நாயகனாக நான் ஆடும் அதிரடி ஆக்சன் தேர்தல் கிரைம் திரில்லராக இந்த படத்தை இயக்கியுள்ளேன் என கூறியுள்ளார் அவர்.
தேர்தல் நெருங்கப் போகும் சமயத்தில் வரப் போகும் இந்த "பூகம்பம்" யாரையெல்லாம் அதிர விடப் போகிறதோ.. வெயிட் அன்ட் பார்ப்போம்.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}