Israel Under Attack: வரலாறு காணாத தாக்குதலில் இறங்கிய ஹமாஸ்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்!

Oct 07, 2023,06:23 PM IST

காஸா நகரம்: இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேல் மீது மிகக் கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளது ஹமாஸ் இயக்கம். இதை இஸ்ரேல் மற்றம் உலக நாடுகள் யாருமே எதிர்பார்க்கவில்லை. அதை விட முக்கியமாக, இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளுக்கும் மிகத் தைரியமாக ஹமாஸ் போராளிகள் ஊடுறுவி கடும் தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.


ஹமாஸ் அமைப்பின் இந்த அதிரடியைக் கண்டு கடும் கோபமடைந்துள்ள இஸ்ரேல் தற்போது கடுமையான பதிலடி கொடுக்க களத்தில் இறங்கியுள்ளது. இதனால் அப்பாவி பாலஸ்தீனியர்கள் நூற்றுக்கணக்கில் கொடூரமாக பலியாகும் அபாயம் அதிகரித்துள்ளது.


பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையிலான மோதல் பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஓயாத போராகும். யாசர் அராபத் காலத்துக்கு முன்பு, அதற்குப் பின்பு என இதை இரண்டாகப் பிரிக்கலாம். அராபத் இருந்தவரை இது சுதந்திரப் போராக இருந்தது. பின்னர் ஹமாஸ் போராளிகள் வசம் இந்தப் போர் போன பின்னர் அது வேறு பாதையில் திரும்பி விட்டது.




சமீப காலமாக ஹமாஸ் இயக்கத்தினருக்கும், இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் அடிக்கடி மோதல் வலுத்து வந்தது. இஸ்ரேல் தொடர்ந்து விதிகளை மீறி அத்துமீறுவதாக பாலஸ்தீனமும் குற்றம் சாட்டி வந்தது. இந்த நிலையில்தான் இன்று ஹமாஸ் அதிரடித் தாக்குதலை களம் இறக்கியுள்ளது.இதுவரை இல்லாத அதிரடித் தாக்குதல் இது என்பதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இஸ்ரேலே கூட இதை எதிர்பார்க்கவில்லை.


ஹமாஸ் மிக மிக தெளிவாக திட்டமிட்டு தாக்குதலைத் தொடுத்துள்ளது. இஸ்ரேலின் உளவுத்துறைக்கு இது மிகப் பெரிய தோல்வியாகக் கருதப்படுகிறது.  ஆயிரக்கணக்கான ராக்கெட்களை இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மீது ஏவித் தாக்கியது ஹமாம். மேலும் நூற்றுக்கணக்கான ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் பலமுனைகளில் புகுந்துள்ளனர். கார்கள், மோட்டார் சைக்கிள்கள், பாரா கிளைடர்கள் என பல்வேறு வழிகளில் உள்ளே புகுந்து கண்ணில் பட்ட இஸ்ரேலியர்களை சுட்டுத் தள்ளியுள்ளனர். இது வரலாறு காணாதது.


இஸ்ரேலின் தென்  பகுதி நகரங்கள் ஹமாஸ் தாக்குதலால் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டன. செடாரட் என்ற நகரில் காரில் வேகமாக வந்த ஹமாஸ் போராளிகள், சாலையில் சென்ற இஸ்ரேலியர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளும் வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.   பல இடங்களில் கொல்லப்பட்ட இஸ்ரேல் ராணுவத்தினரின் உடல்களை ஹமாஸ் போராளிகள் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.


state of war : உச்ச கட்ட பதற்றத்தில் இஸ்ரேல்...போர் அறிவிப்பு வெளியீடு


காஸா நகரம் தற்போது ஹமாஸ் கையில்தான் உள்ளது. அங்கு சட்டம் ஒழுங்கு சுத்தமாக இல்லை. ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா பகுதியில் தொடர்ந்து இஸ்ரேலியப் படைகள் அத்துமீறி வருவதாக ஹமாஸ் குற்றம் சாட்டி வந்தது. இந்த நிலையில்தான் இந்தப் போரில் குதித்துள்ளது ஹமாஸ்.


அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்கப் போகிறோம். கடவுளின் உதவியுடன் நாங்கள் போரில் குதிக்கிறோம் என்று ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகம்மது டெய்ப் ஒரு வீடியோ செய்தியையும் வெளியிட்டுள்ளார்.


இஸ்ரேலின் பதிலடி எப்படி இருக்கப் போகிறது என்று உலக நாடுகள் அச்சத்துடன் எதிர்நோக்கியுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்