ஶ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து தனது நூறாவது செயற்கைக் கோளான என்விஎஸ் 02 செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்தவுள்ளது இஸ்ரோ.
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து கடந்த 1979ம் ஆண்டு முதல் ராக்கெட்கள் மூலம் செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில், முதல் ராக்கெட்டாக எஸ்எல்வி இ 01 மூலம் இந்தியா தனது முதல் செயற்கைக் கோளை, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தியது. அப்போது ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதள மைய இயக்குநராக இருந்தவர் மறைந்த டாக்டர் அப்துல் கலாம் ஆவார். அன்று முதல் இதுவரை 99 முறை செயற்கைக் கோள்களை இங்கிருந்து செலுத்தியுள்ளது இஸ்ரோ. இந்த நிலையில் நாளை தனது 100வது மிஷனை அது மேற்கொள்ளவுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஏற்கனவே நிலவை ஆய்வு செய்ய சந்திரயான், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மங்கள்யான், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் ஒன் போன்ற பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி பல்வேறு உலக நாடுகளை திரும்பிப் பார்க்க சாதனை படைத்தது வருகிறது. இந்த நிலையில் இஸ்ரோ தனது நூறாவது செயற்கைக் கோளை ஏவு சாதனை படைக்கவுள்ளது.
ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட் மூலம் என்விஎஸ்- 02 என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த இருக்கிறது. இது இந்த என் வி எஸ் 02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிக்கவும், பேரிடர் ஏற்படும்போது அதன் தகவல்களை துல்லியமாக தெரிவிக்கவும் பயன்படும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நாளை காலை 6:30 மணிக்கு ராக்கெட் ஏவப்பட உள்ளது. முன்னதாக இந்த ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று காலை 5:30 மணிக்கு தொடங்கப்பட்டு, தொடர்ந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}