Chandrayaan 3.. விக்ரம் லேண்டர் Touchdown.. நேரலையில் அசத்திய இஸ்ரோ

Aug 23, 2023,07:21 PM IST
- சகாயதேவி

பெங்களூரு: சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கப் போகும் நிகழ்வை இஸ்ரோ நேரலையாக ஒளிபரப்பு செய்து ஒட்டு மொத்த இந்தியர்களையும் நிலவுக்கே கூட்டிச் சென்று விட்டது. 

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவில் வெற்றிகரமாக இறங்கியது. இந்த நிலையில், நிலவின் தரப்பரப்பிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து எடுத்த நிலவின் புகைப்படங்களை நேற்று வெளியிட்டது இஸ்ரோ. 



சுமார் 70 கி. மீ. உயரத்தில் இருந்து லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள பொசிஷன் டிஸ்கவரி கேமரா (எல்பிடிசி) மூலம் சனிக்கிழமை இந்த படங்கள் பிடிக்கப்பட்டன. இந்த கேமராவானது, நிலவை விதம் விதமாக படம் பிடிக்கும். மேலும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலவில் எந்த இடத்தில் இறங்கினால் சரியாக இருக்கும் என்பதையும் லேன்டர் தீர்மானிக்க இந்த படங்கள் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை மாலை 6:04 மணிக்கு நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டர் தரையிறங்கியது. இந்தியாவின் பெருமையை சந்திரயான்-3 நிலைநாட்டும் என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை. இந்த அருமையான தருணத்தை நேரலையாக கண்டு களிக்க இஸ்ரோ சில ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அதன் இணையதளம், யூடியூப் சானல் மற்றும் பேஸ்புக் மூலம் நேரலையில் இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தை நாம் கண்டு களிக்க ஏற்பாடு செய்திருந்தது. 

இந்த இணையதளங்கள் மூலமாக நாட்டு மக்கள் சந்திரனில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய நிகழ்வைக் கண்டு மகிழ்ந்தனர். நாடு முழுவதும் தொலைக்காட்சிகளும் இதை நேரலை செய்திருந்தன.

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்