சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவ விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பல்வேறு கட்சிகளும் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேசி வருகின்றனர். முக்கிய கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் வேலைகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றன. ஒரு சில கட்சிகள் நாடாளுமன்ற வேலைகளை தொடங்காமலும், கூட்டணி குறித்த முடிவு தெரிவிக்காமலும் இருந்து வருகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசி வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தை விரைவில் முடியவுள்ளது. மறுபக்கம் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது வேட்பாளர் விருப்ப மனுக்களை விநியோகிக்க ஆரம்பித்துள்ளது திமுக.
அதன்படி விண்ணப்ப படிவ விநியோகம் இன்று முதல் கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் ரூபாய் 50,000 எனவும், அதற்கான விருப்ப மனுவை ரூ. 2000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி மாலை 6 மணிக்குள் செலுத்த வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
விருப்ப மனு விநியோகம் தொடங்கியதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயம் களை கட்டியுள்ளது. திமுகவினர் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வாங்கி வருகின்றனர்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}