"நிலா அது வானத்து மேலே".. கடலில் மிதந்த.. ரூ. 3600 கோடி "கொக்கைன்".. அதிர்ந்த இத்தாலி!

Apr 18, 2023,12:55 PM IST
ரோம்: இத்தாலியின்  கிழக்கு சிசிலி அருகே நடுக் கடலில் மிதந்து கொண்டிருந்த ரூ. 3600 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப் பொருளை இத்தாலி சுங்கத்துறை கைப்பற்றியுள்ளது. இத்தாலி போதைப் பொருள் வரலாற்றில் மிகப் பெரியஅளவிலான கொக்கைன் பிடிபட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

கிழக்கு சிசிலி கடலில் மிகப் பெரிய அளவில் பார்சல்கள் மிதப்பதாக இத்தாலி சுங்கத்துறை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து படகுகளில் சம்பந்தப்பட்ட கடல் பகுதிக்கு சுங்கத்துறை போலீஸார் விரைந்தனர். அங்கு போய்ப் பார்த்தபோது தண்ணீர் உள்ளே போகாத அளவுக்கு பார்சல்கள் பக்காவாக பேக் செய்யப்பட்டு கடலில் போடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த  பார்சல்களை சுங்கத்துறை கைப்பற்றியது. 70க்கும் மேற்பட்ட பார்சல்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன. நீட்டாக பேக் செய்து, அதன் மேல் பகுதியில் ஒளிரும் வகையிலான பேஸ்ட் தடவப்பட்டிருந்தது. மேலும் அந்தப் பார்சல்களை டிராக் செய்வதற்கான அதி நவீன சாதனமும் அத்துடன் பொருத்தப்பட்டிருந்தது.

இந்த பார்சல்கள் எங்கிருந்தாலும் அதை எளிதாக கண்டறிவதற்காக இந்த டிராக்கிங் சாதனத்தைப் பொருத்தியுள்ளனர். மேலும் தண்ணீர் உள்ளே போய் விடாமலும் இந்த பார்சல் வாட்டர் ப்ரூப் வசதியுடன் கூடியதாக இருந்தது. போதைப் பொருள் கடத்தல்காரர்கள்தான் இதை கடலில் விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்று போலீஸார் கருதுகின்றனர். பிறகு வந்து எடுத்துக் கொள்ளலாம் என்று கடலில் போட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.




பால்கன் நாடுகளில் போதைப் பொருள் நடமாட்டமும், கடத்தலும் மிக மிகப் பிரபலம். அந்த நாடுகளைச் சேர்ந்த கும்பல்கள் இத்தாலி வழியாகத்தான் போதைப் பொருள் கடத்தலை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2018ம் ஆண்டு முதல் இத்தாலி வழியாக நடைபெறும் போதைப் பொருள் கடத்தல் அதிகமாகியுள்ளது. அதற்கேற்ப பறிமுதலும் அதிகரித்துள்ளது. 

தற்போது சிக்கியுள்ள கொக்கைன் போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு 440 மில்லியன் டாலராகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 3600 கோடிக்கு வரும். மொத்தம் 2 டன் எடை கொண்டது. கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தில் ஒரு காட்சி வரும்.. கமல்ஹாசனும், ஜனகராஜும் கடத்தல் பொருட்களுடன் கடலில் வரும்போது கஸ்டம்ஸ் அதிகாரிகளின் படகு அவர்களை சுற்றி வளைக்கும். உடனே கமல்ஹாசன் பொருட்களைத் தூக்கி கடலில் போட்டு விடுவார். இதைக் கண்டு ஜனகராஜ் பதறுவார். ஆனால் கடலில் போட்டாலும் மீண்டும் மிதந்து வரும் வகையில் செட்டப் செய்திருப்பார் கமல். இதே பாணியில் தற்போது இத்தாலியிலும் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு பெரிய கடத்தல் கொக்கைனை பறிமுதல் செய்திருப்பதற்கு இத்தாலி சுங்கத்துறை அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் அந்த நாட்டின் துணைப் பிரதமர்  மட்டியோ சால்வினி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு

news

ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

news

இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!

news

மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

news

ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்

news

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்

அதிகம் பார்க்கும் செய்திகள்