- கவிச்சுடர் ஜெ. லீலாவதி, மேட்டுப்பாளையம்
கொங்கு மண்டலத்தில் உள்ள பழமையான ஆலயங்களில் ஒன்றுதான் அன்னூர் மன்னீஸ்வரர் திருக்கோவில்.
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு, இவ்விடம் வள்வனமாகத் (வள்ளி வனம்) திகழ்ந்த காலத்தில் வேடர்கள் அனைவரும் கிழங்கு பறித்து உண்டு வாழ்ந்து வந்தனர். அச்சமயத்தில் 'அன்னி' எனும் வேடன் கிழங்கை அகற்றுவதற்காகக் கனமான ஆயுதத்தால் தோண்டியபோது, பெருங்கொண்ட ஓசையுடன் சத்தமும் உதிரமும் வெளிவந்தது. என்ன செய்வது என்று அறியாமல் திகைத்த வேடன், அருகில் இருந்தோரை அழைத்து அதைக் காண்பித்தான்.
இதைக் கேள்வியுற்ற சேரமன்னன் வள்ளி வனத்திற்கு விஜயம் செய்து, ஓசை வந்த இடத்தில் இருந்த கிழங்கைப் பெருங்கொண்ட கயிற்றாலும் இரும்புச் சங்கிலியாலும் யானையைக் கொண்டு இழுக்க முயன்றான். அவனது முயற்சி வீண் போகவே, மனம் தளர்ந்த மன்னன் நின்ற சமயத்தில், கருமேகங்கள் சூழப் பெருத்த இடி முழக்கத்துடன் வானில் ஒரு அசரீரி வாக்கு ஒலித்தது.
"இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்பு ரூபமாகத் தோன்றியுள்ளார்; மேலும் பறவை வடிவமாக எழுந்தருளிக் காட்சியளிப்பார்" என அப்பொழுது கூறப்பட்டது. இறைவனை அறியாமல் சோதித்த மன்னனும் வேடனும் இறைவனிடம் மன்னிப்புக் கோரினர். இறைவன் அவர்களின் பிழையைப் பொறுத்து அருள் புரிந்ததால், இத்தலம் 'மன்னீஸ்வரர்' எனப் பெயர் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, சேர மன்னர் சிற்ப நூலில் கூறிய வண்ணம் அழகான ஆலயத்தை அமைத்தார். அன்னி எனும் வேடனின் பெயரால் இவ்வூர் 'அன்னியூர்' எனப் பெயர் பெற்றது. இதுவே மருவி பின்னர் அன்னூர் என்றானது. பின்னர் சேர மன்னர்கள் மற்றும் கொங்கு சோழர்கள் ஆண்ட காலத்தில் பல திருப்பணிகள் இத்தலத்தில் நடைபெற்றன. இத்தலத்தின் மூலஸ்தான கோபுரம் 'கைலாச விமானம்' எனப் பெயர் கொண்டுள்ளது.
இந்த ஆலயத்திற்கு 'தென் காளஹஸ்தி' என்றும் 'மேற்றலை தஞ்சாவூர்' என்றும் சிறப்புப் பெயர்களும் உண்டு.
குறிப்பு:
முன்ஜென்ம பாப தோஷங்கள் நிவர்த்தி ஆவதற்கும், தெரியாமல் செய்த தவறுகளுக்கு இறைவனிடம் மன்னிப்பு கோருவதற்கும் இத்தலம் சிறப்பு அம்சமாகும். இத்தலத்தில் 21 பிரகாரங்கள் வலம் வருவது (பிரதிட்சணம்) இதற்குரிய முக்கிய பரிகாரமாகும்.
மாமன் காரன் பெத்த புள்ளே மனசைத் தொறந்து பேசும் புள்ளே!
சென்னையில் இன்று முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி
மன்னித்து அருளக் கூடியவர் அன்னூர் மன்னீஸ்வரர்!
நீங்கா நினைவுகள்
பஞ்சர் தாத்தா.. இளநீர் தாத்தா.. கூழ் பாட்டி மற்றும் தேன் வாழைப்பழம்!
அரட்டை அரங்கம் விசு.. மறக்க முடியாத மீனாட்சிசுந்தரம் ராமஸ்வாமி விஸ்வநாதன்!
புராணம் அறிவோம்.. நவராத்திரி ஏன் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது?
Thentamil Editorial: மனதை நேசிப்போம், நிம்மதியாய் வாழ்வோம்.. உலக மனநல நாள் பிரகடனம்
தனிமை
{{comments.comment}}