மீண்டும் என் தந்தை!

Oct 09, 2026,03:13 PM IST

- கவிச்சுடர் ஜெ. லீலாவதி, மேட்டுப்பாளையம்


மகன் உருவில் 

மீண்டும் என் தந்தை 


தாய் இருந்த போதும் 

தந்தைமீது ஏனோ

அத்தனை பிரியம் 


தந்தை காட்டும் அன்புக்கு முன்னால் 

தாயின் பாசம் தோற்றுதான் போகிறது 

இந்த பெண் பிள்ளைகளிடம் 




தந்தைக்கு நிகர் தந்தை மட்டும் தான் 

அது ஏன் என்றால் 

அது அப்படிதான் என்பார்கள் 

இந்த பெண் பிள்ளைகள் 


இதில்  பெற்றவளுக்கு சற்று 

பொறாமையாகதான் இருக்கும்

அது ஏன் 

அதுவும் அப்படிதான் என்பார்கள் 

இந்த பெண் பிள்ளையை பெற்ற அம்மாக்கள் 


ஆனால் தன் துணையை இழந்தவள் 

வேறு வழியின்றி தன் பிள்ளைகளுக்காக 

அவள் தன்னை தானே தேற்றிக் கொள்வாள்

ஆனால் பெண் பிள்ளையாகிய எங்களால்

மீள முடியவில்லையே!


அப்படிதான் நானும் 

மனதின் ஓரத்தில் 

அந்த நினைவோடு 

ஒரு நடைப் பிணமாய் 

அவரின் பிரிவு அன்றாடம் 

என்னையும் வாட்டி வதைத்தது 


என் வலியை உணர்ந்தவனாய்

இறைவன் எனக்கு அளித்த வரமே  

என் மகன் 


தந்தையின் பாசம் 


எனக்காக வாழும் 

என்னை நேசிக்கும் உறவு 

என் தந்தையாய் என்னை 

வழி நடத்தும் என் அன்பு மகன் 

மனதிற்கு மருந்தாய் 

இல்லை இல்லை 

என்னை தேடி மீண்டும் மகனாகஎன் தந்தை!


இதற்காக தான் வேண்டும் 

ஒரு ஆண் பிள்ளை!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்