விசாகப்பட்டனம்: தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி விலகி விட்டதாக கூறப்பட்ட நிலையில் அதை மறுத்துள்ளார் பவன் கல்யாண். கூட்டணியில் நீடிக்கிறோம்.. சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு மட்டுமே தருவதாகவும் பவன் கல்யாண் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடித்து வரும் பல்வேறு கட்சிகள் அடுத்தடுத்து விலக ஆரம்பித்துள்ளன. இவர்கள் எல்லாம் விலக மாட்டார்கள், நீடித்து இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சிகள் ஆகும். தமிழ்நாட்டில் பாஜகவின் மிகப் பெரிய பலமே அதிமுகதான். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்து விட்டு போய் விட்டது. இப்போது அந்த இழப்பை எப்படி சமாளிப்பது என்று பாஜக அலைபாய்ந்து கொண்டுள்ளது.
இந்த நிலையில் இன்னொரு அதிர்ச்சியாக ஆந்திர மாநிலத்தில் பாஜகவின் கூட்டணியில் இருந்து வந்த ஜன சேனா கட்சியும் அதிலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. இக்கட்சி நடிகர் பவன் கல்யாணின் கட்சியாகும். சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணியில் சேருவதாக பவன் கல்யாண் கட்சி அறிவித்தாக முன்பு செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து பவன் கல்யாண் கூறுகையில், ஆந்திர மாநிலத்தின் மிகப் பெரிய கட்சி தெலுங்கு தேசம். அந்தக் கட்சி மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைக்க ஆதரவு தர வேண்டியது நமது கடமையாகும். இன்று தெலுங்கு தேசம் கட்சி தடுமாறிக் கொண்டுள்ளது. அதைத் தாங்கிப் பிடிக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் ஜன சேனாக் கட்சியினரின் ஆதரவும், அரவணைப்பும் தெலுங்கு தேசத்திற்குத் தேவை. இருவரும் இணைந்தால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு கவிழும் என்று கூறியிருந்தார் பவன் கல்யாண்.
பல்டி அடித்த பவன் கல்யாண்
ஆனால் தற்போது அதை மறுத்துள்ளார் பவன் கல்யாண். தனது கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகவில்லை என்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு மட்டுமே தருவதாகவும் பவன் கல்யாண் கூறியுள்ளார். ஏன் இந்த குழப்பமான நிலைப்பாடு என்று தெரியவில்லை.
தெலுங்கு தேசம் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஊழல் புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் கூட கிடைக்கவில்லை. இதை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இந்த நிலையில்தான் அந்தக் கட்சிக்கு ஆதரவாக கை கொடுத்துள்ளார் பவன் கல்யாண்.
அதிமுக ஏற்கனவே விலகல்
தென் மாநிலங்களில் வலுவான கட்சியாக பாஜக இருந்து வந்தது கர்நாடகத்தில் மட்டும்தான். அங்கும் கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைப் பறி கொடுத்து விட்டது. தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் எப்படியாவது பெரும் வெற்றியைப் பதிவு செய்து விட அந்தக் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் அதே அண்ணாமலையை காரணமாக வைத்து கூட்டணியை விட்டு வெளியேறி விட்டது அதிமுக.
இந்த அதிர்ச்சியை அது எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், இது நிரந்தரமா பிரிவா அல்லது சும்மானாச்சுக்கும் டிராமாவா என்ற சந்தேகம் இன்னும் தமிழ்நாட்டில் பலருக்கும் உள்ளது. பிரிவு நிரந்தரமாக இருந்தால் அது பாஜகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவேதான் பேட்ச் அப் செய்ய பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.
இந்த நிலையில்தான் ஆந்திராவில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. உண்மையில் சந்திரபாபு நாயுடுவே மறைமுகமாக பாஜக ஆதரவாளர்தான். அவர் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பியதைத் தொடர்ந்தே மக்கள் ஆதரவை இழந்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் பவன் கல்யாண் அவருடன் கை கோர்ப்பதும் அதேசமயம், பாஜக கூட்டணியில் நீடிப்பதாகவும் கூறியிருப்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}