ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு

Jan 07, 2026,05:15 PM IST

சென்னை : விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று வழங்குவது தொடர்பான வழக்கில் படக்குழு மற்றும் சென்சார் குழுவினர் இடையே கோர்ட்டில் காரசார விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து ஜனநாயகன் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நாளை மறுநாள் இந்த படம் தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என கோர்ட் தெரிவித்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி ஜனநாயகன் படம் நாளை மறுநாள் ரிலீசாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் ஜனவரி 09ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு, ஆன்லைன் புக்கிங் நிறைவடைந்து விட்டது. ஆனால் தற்போது வரை சென்சார் போர்டு சான்று வழங்கவில்லை. இதனால் நேற்று சென்னை ஐகோர்ட்டில் படக்குழு சார்பில் அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வழக்கு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்றும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கோர்ட்டில் படக்குழு மற்றும் தணிக்கை குழு இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. 




ஜனநாயகன்  படத்திற்கு சென்சார் சான்று கேட்டு டிசம்பர் 18ம் தேதியே விண்ணப்பிக்கப்பட்டு விட்டது. சென்சார் போர்டில் உள்ள ஐந்து உறுப்பினர்களில் நான்கு பேர் படத்திற்கு யு/ஏ சான்று வழங்கலாம் என அனுமதி வழங்கிய நிலையில், ஒரு உறுப்பினர் மட்டும் மறுஆய்வு செய்யும் படி கோரி உள்ளார். இதனால் உள்நோக்கத்துடன் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் வழங்கப்படவில்லை என்றும், ஒரு உறுப்பினருக்காக மறுஆய்வு செய்ய முடியாது என்றும் படக்குழு தெரிவித்து வருகிறது. ஆனால் உள்நோக்கத்துடன் தணிக்கை சான்று வழங்குவதை தாமதிக்கவில்லை. புதிய உறுப்பினர் படத்தை பார்க்க வேண்டும். அதனால் கூடுதல் அவகாசம் வேண்டும் என சென்சார் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது.


படத்தின் ரிலீசை தள்ளி வைத்தால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும். ரூ.500 கோடி வரை இழப்பீடு ஏற்படும் என தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது. பெரும்பான்மை உறுப்பினர்கள் யு/ஏ சான்று வழங்கலாம் என்ற பிறகும் எப்படி சான்று வழங்குவதை தள்ளி வைக்க முடியும் என கேரா்ட் கேள்வி எழுப்புகிறது.  பெரும்பான்மை உறுப்பினர் கருத்தின் அடிப்படையில் படத்திற்கு தணிக்கை  வழங்க வேண்டும் என படக்குழு கோரிக்கை வைத்துள்ளது. தணிக்கை வழங்குவதற்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தணிக்கை குழு தெரிவித்துள்ளது.


இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை ஜனவரி 09ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. ஜனநாயகன் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட ஜனவரி 09ம் தேதியன்று தீர்ப்பு வெளியாகும் என கூறி இருப்பது விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வழக்கு: நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

news

ஜனநாயகன் பட விவகாரம்... விஜய்க்கு ஆதரவாக.. சினிமா, அரசியல் துறையில் உரத்து ஒலிக்கும் குரல்கள்!

news

மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது...ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காங்கிரஸ்

news

தவெக தனித்து போட்டியா? கூட்டணியா?... ரகசியத்தை உடைத்த கிரிஷ் சோடங்கர்

news

அமலாக்கத்துறை ரெய்டு என்ற பெயரில் டேட்டாக்களை திருடுகிறார்கள்...மம்தா பகீர் குற்றச்சாட்டு

news

'பழைய ஓய்வூதிய திட்டமே நிரந்தர தீர்வு': தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை

news

சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026...நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுக்க போவது யார்?

news

கூட்டணி அமைப்பதற்கே திண்டாட்டம்...அதிமுக கூட்டணி பற்றி திருமாவளவன் கிண்டல்

அதிகம் பார்க்கும் செய்திகள்