அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.. பூச்சாண்டிக்கு பயப்பட மாட்டோம்.. ஜெயக்குமார்  அதிரடி!

Sep 24, 2023,01:28 PM IST
சென்னை: அதிமுக  கூட்டணியில் பாஜக இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அது தொடர்கிறது. எந்த பூச்சாண்டிக்கும் அதிமுக பயப்படாது என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை கூட்டப்பட்ட உள்ளது. இக்கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் அதிமுகவினரும், பாஜகவினரும் உள்ளனர். ஆளும் கட்சியான திமுகவும் அதிமுக பாஜக மோதல் அடுத்து எந்த நிலைக்கு மாறும் என்பதைக் காண ஆர்வமாக உள்ளது.

இந்த நிலையில் இன்று  செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜெயக்குமார். அப்போது அவரிடம் அதிமுக நிலைப்பாடு என்ன, அதிமுக தலைவர்கள் டெல்லி போய் பாஜக தலைவர்களைச் சந்தித்தனர், ரெய்டு வரும் என்று அண்ணாமலை மறைமுகமாக மிரட்டியிருக்கிறாரே என்றெல்லாம் செய்தியாளர்கள் கேட்டனர். அதுகுறித்து ஜெயக்குமார் அளித்த பதில்கள் வருமாறு:

நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: செப்டம்பர் 18ம் தேதி அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று நான் அறிவித்தேன். அந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. அதை முதலில் புரிஞ்சுக்கங்க. அதுதொடர்கிறது. பொதுவாகவே, நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.  அப்படி நடக்கவுள்ள நிலையில் இன்று எந்தக் கருத்தையும்  தெரிவிப்பது உசிதமாக இருக்காது. எனவே ஒரு நாள் காத்திருங்க.. உங்க கிட்ட வந்து டெலிவர் பண்றேன். Lets wait and see..  அதிமுக பற்றி மட்டுமே நீங்க கவலைப்படறீங்க. பரவாயில்லை. இது செல்வாக்கு உள்ள கட்சி என்பது மகிழ்ச்சி தருகிறது. நாங்கதான் உங்களுக்கு முக்கியம்.. பெஸ்ட்.




பாஜக தலைவர்களுடன் சந்திப்பு:  டெல்லி போய் மத்திய அமைச்சர்களை சந்தித்தது யார்.. எங்களது கட்சி எம்.பியும் எம்எல்ஏவும்தானே.. அதில் என்ன இருக்கிறது. நாட்டின் நலன் குறித்து பேசுவதில் என்ன தவறு. தமிழ்நாட்டின் பிரச்சினை குறித்து சொல்லக் கூடாதா. எம்.பி போய் பார்ப்பது தப்பா.. இதுக்குத்தான் போய் பேசினார்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்.

பூச்சாண்டிக்குப் பயப்பட மாட்டோம்:   ரெய்டு குறித்தெல்லாம் நாங்கள் கவலைப்படவே இல்லை. அதாவது மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம். இதை பல தடவை சொல்லிட்டோம். ரஜினி சொல்வார்ல... எங்களுக்குப் பிடிக்காத வார்த்தை.. இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுவது அதிமுக இல்லை. எத்தனையோ சோதனைகளை தாங்கிட்டோம்.

அம்மா மேல கேஸ், முன்னாள் அமைச்சர்கள் மீது கேஸ்.. ஆகையினால, எங்களுடைய கடமையிலிருந்து பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்களை நோக்கி, மக்கள் எதிர்பார்ப்பு என்ன அதை நிறைவேற்றுவதுதான் எங்களது நோக்கம். சோதனைக்கெல்லாம் பயப்பட மாட்டோம். தலைவர் உருவாக்கி, அம்மா வளர்த்த இயக்கம் இது. இப்போது எடப்பாடியார் தலைமையில் இந்த இயக்கம், இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படாது.. நாளைக்கு மீட் பண்ணுவோம் என்று கூறி டாட்டா காட்டி விட்டுச் சென்றார் ஜெயக்குமார்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்