லாஸ் ஏஞ்சலெஸ்: ரசிகர்களால் பென்னிபர் என்று செல்லமாக அழைக்கப்படும் பென் அப்லோக் - ஜெனிபர் லோபஸ் ஜோடி பிரிந்துள்ளது. இவர்களது பிரிவு இருவரது ரசிகர்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது விவாகரத்து குறித்த செய்தியை ஜெனிபர் லோபஸ் அறிவித்துள்ளார்.
ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான ஜோடிகளில் ஒன்றுதான் ஜெனிபர் லோபஸ் - பென் அப்லாக். இருவரையும் ரசிகர்கள் பென்னிபர் என்றுதான் செல்லமாக அழைப்பார்கள். இருவரும் ஏற்கனவே ஒருமுறை காதலித்து திருமணம் புரிந்து பின்னர் பிரிந்தனர். 20 வருடங்கள் கழித்து 2 வருடத்திற்கு முன்பு மீண்டும் இருவரும் இணைந்தனர். தற்போது மீண்டும் பிரிந்துள்ளனர்.

பென் அப்லோக்கிடமிருந்து விவாகரத்து கோரி லாஸ் ஏஞ்சலெஸ் கோர்ட்டில் மனு செய்துள்ளார் ஜெனிபர் லோபஸ். இதுகுறித்து பென் அப்லோக் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. 55 வயதாகும் ஜெனிபருக்கு அப்லோக் 5வது கணவர் ஆவார். அதேசமயம், அப்லோக்கிற்கு ஜெனிபர் 2வது மனைவி ஆவார். லோபஸை விட 3 வயது சிறியவர் அப்லோக். நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வரும் அப்லோக், ஆஸ்கர் விருது பெற்றவர் ஆவார். ஜெனிபர் லோபஸ், பாப் பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர்.
2002ம் ஆண்டு இந்த ஜோடி முதலில் டேட்டிங் செய்ய ஆரம்பித்தது. 2003ம் ஆண்டு கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தனர். பின்னர் திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்து பிரிந்து விட்டனர். இந்த நிலையில் 2021ம் ஆண்டும் இருவருக்கும் இடையே உறவு பூத்தது. மீண்டும் எங்களது காதலுக்கு ஒரு வாய்ப்பு தருவதாக அறிவித்திருந்தார் லோபஸ். பின்னர் 2002 ஜூலையில் லாஸ் வேகாஸ் நகரில் வைத்து இருவரும் மணம் புரிந்தனர். ஆனால் இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. தற்போது மீண்டும் இந்த ஜோடி பிரிகிறது.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}