Jokes: என்னையவா மாமா கூப்பிட்டீங்க.. இந்த தங்கத்தாலே மானமே போச்சு குமாரு!

Apr 03, 2024,05:39 PM IST
சென்னை: உதயகீதம் அப்படின்னு ஒரு படம் வந்துச்சு அந்தக் காலத்துல.. அதுல ஒரு ஜோக் வரும்.. கவுண்டமணி தேங்காய்க்குள் பாம் இருக்குன்னு வதந்தி கிளப்பி ஒரே பரபரப்பாகி விடும்.. "இந்த அநியாயத்தைக் கேட்டேளா.. தேங்காய்க்குள்ள பாம் வச்சுட்டாளாம்" என்று ஒருவர் புலம்புவார்.. இப்படியே மக்கள் ஆளாளுக்குப் புலம்பிட்டிருப்பாங்க..!

கிட்டத்தட்ட அதே மாதிரியான புலம்பல் இப்போதும் வந்துள்ளது.. எல்லாத்துக்கும் காரணம் இந்த தங்கம்தான்.. இன்னிக்கு ஒரு சவரன் விலை என்ன தெரியுமா 52 ஆயிரம் ஓவாயாம் என்று மக்கள் ஒருவருக்கு ஒருவர் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். யாரைப் பார்த்தாலும் தங்கம் விலை குறித்து பேசாத வாய்களே கிடையாது. அப்படி ஆகி விட்டது நிலைமை.

வழக்கமாக நம்மாளுங்க டிரெண்டிங்ல எது ஓடுதோ அதை வச்சு ஜோக்ஸ் போட்டு தாளித்து எடுத்து விடுவார்கள். தங்கத்தை மட்டும் விட்டு வப்பாங்களா என்ன.. அதையும் வச்சு செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.. நாமளும் உங்களுக்காக நாலு தங்கத்தை.. அட ஜோக்கைச் சொன்னோங்க நீங்க வேற.. எடுத்துட்டு வந்துருக்கோம்.. என்ஜாய் பண்ணுங்க!



பையன்: தங்கமே உன்னைத்தான் உன்னைத்தான்

பொண்ணு: என்ன மாமா என்னைய நினைச்சா பாடுனீங்க

பையன்: அட நீ வேற.. நான் தங்கத்தோட விலையை நினைச்சு புலம்பிட்டிருக்கேன்

பொண்ணு: ம்க்கும்!

--



போலீஸ் ஆபீசர்: உங்களை அரெஸ்ட் பண்றோம்

வாலிபர்: ஏன் சார்.. நான் என்ன சார் தப்பு பண்ணேன்

போலீஸ்: நீங்க தங்கத்தை தூக்கிட்டுப் போனதா தகவல் வந்திருக்கே

வாலிபர்: சார்.. தங்கம் என் பொண்டாட்டி சார்.. !

போலீஸ்: !!!!!!!!!!!!!!!!!!

--



தங்கமீனா: சார் எங்க குடும்பத்துக்குப் பாதுகாப்பு வேணும் சார்

போலீஸ் அதிகாரி: அப்படியா எதுக்கு.. அப்படி என்ன ஆபத்து இருக்கு உங்களுக்கு.

தங்கமீனா: சார் என் பேரு "தங்க"மீனா.. என் அப்பா பேரு "தங்க"முத்து.. அம்மா பேரு "தங்க" மாரி..  வீட்டுக்காரர் பேரு "தங்க" ராஜு.. என் பையன் பேரு "தங்க"மகன்.. பொண்ணு பேரு "தங்க" மயில்.. தங்கம் விலை வேற உயர்ந்துட்டே போகுது.. யாராவது கடத்திருவாங்களோன்னு பயமா இருக்கு சார்.. அதான் பாதுகாப்பு வேணும்

போலீஸ் அதிகாரி: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

-- 

அந்தப் பையன்: தங்கத்தை save பண்ணலாம்னு இருக்கேன்

இந்தப் பொண்ணு: எப்படி

அந்தப் பையன்: உன் நம்பரைக் கொடுத்தா "தங்கம்"னு save பண்ணி வச்சுப்பேன்ல!

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்