191 வருஷமாச்சு.. இன்னும் சூப்பராக வலம் வரும் ஜொனாதன்.. உலகின் மிக மிக வயதான விலங்கு!

Dec 11, 2023,05:30 PM IST

விக்டோரியா, செஷல்ஸ்: உலகின் மிக மிக வயதான நில விலங்கு  என்ற சாதனை படைத்துள்ள ஜெனாதன் ஆமைக்கு 191 வயதாகியுள்ளது. இந்த ஆமைதான், நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிக மிக வயதானதாகும். இது கின்னஸ் சாதனையும் கூட.


செஷல்ஸ் தீவில் வசித்து வரும் இந்த ஆமையானது,  1832ம் ஆண்டு பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆமையானது தற்போது செயின்ட் ஹெலினா தீவில் வசித்து வருகிறது. இந்த தீவுக்கு கடந்த 1882ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அப்போது இதற்கு வயது 50 ஆகும்.


ஜொனாதன் ஆமை தனது 191வது பிறந்த நாளை கொண்டாடும் படம் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.  இந்த வகை ஆமைகள் சராசரியாக 150 வருடங்கள் வரை வாழும். ஆனால் அதைத் தாண்டி 191 வருடத்தைத் தொட்டு அதிசயிக்க வைத்துள்ளது ஜொனாதன்.




இதற்கு முன்பு டூயி மலிலா என்ற ஆமை 188 வருடங்கள் வரை வாழ்ந்து மறைந்தது. அதுதான் உலகிலேயே அதிக வயது வரை வாழ்ந்த உயிரினமாக இருந்தது. அந்த சாதனையை ஜொனாதன் 2021ம் ஆண்டு தகர்த்தது. மலிலா ஆமை 1965ம் ஆண்டு மறைந்தது.


ஜொனாதன் ஆமை இந்று வரை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது. ஆனால் அதற்கு நுகரும் தன்மை போய் விட்டது. மேலும் கண்ணிலும் கண் புரை ஏற்பட்டு பார்வையும் ஓரளவு மங்கியுள்ளது. இருப்பினும் அதற்கு நல்ல பசி உணர்வு உள்ளது. சரியான நேரத்தில் சாப்பிடுகிறது. பழங்கள், காய்கறிகளை அதற்கு உணவாக கொடுக்கிறார்கள்.  இதைப் பராமரிப்பதற்காகவே ஒரு டீம் உள்ளது. அவர்கள்தான் ஜொனாதனுக்கு வேளா வேளைக்கு சாப்பாட்டை கையால் ஊட்டுகிறார்கள். ஜொனாதனுக்குத் தேவையான விட்டமின்கள், தாது உள்ளிட்டவை அடங்கிய உணவு அதற்குக் கொடுக்கப்படுகிறது.




மனிதர்கள் கூட இத்தனை வயது வரை வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அந்த வகையில் ஜொனாதன் மிகப் பெரிய வரலாற்று நிகழ்வாக மாறியுள்ளது. கடந்த ஆண்டுதான் ஜொனாதனின் பிறந்த தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது செயின்ட் ஹெலினா தீவு நிர்வாகம். அதன்படி 1932ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதிதான் ஜொனாதன் பிறந்த நாளாகும்.


இத்தனை கால வாழ்க்கையில் 8 இங்கிலாந்து ராஜ வம்சத்தை பார்த்து விட்டது ஜொனாதன். 40 அமெரிக்க அதிபர்களைப் பார்த்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ஜொனாதனுக்கு வெயிலில் காய்வது என்றால் ரொம்பப் பிடிக்குமாம். அதேசமயம், வெயில் ரொம்ப அடித்தால் மெதுவாக நிழலுக்குப் போய் விடும். மற்ற நேரங்களில் பெரும்பாலும் வெயிலில்தான் இருக்குமாம்.  வெயில் நன்றாக உடலில் பட வேண்டும் என்பதற்காக தனது கழுத்தையும், கால்களையும் நன்றாக விரித்து சூப்பராக சன்பாத் எடுக்குமாம் ஜொனாதன்.


ஜொனாதனுக்கு ரொம்பப் பிடிச்சு சாப்பாடு என்றால் முள்ளங்கி, வெள்ளரிக்காய், கேரட், கீரை வகைகள், ஆப்பிள்கள் ஆகியவைதான். அதை விட முக்கியமாக வாழைப்பழம் கொடுத்தால் சூப்பராக சாப்பிடுமாம்.




ம்ம்.. இந்த ஆமைக்கு மட்டும் பேசும் தன்மை இருந்தால் அந்தக் காலத்து  கதைகளை எல்லாம் கதை கதையாக கேட்டிருக்கலாம் இல்லை!

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்