- ஜோசப் சாம்ராஜ்
கார்த்திக் சுப்புராஜ் படம், மதுரை சிலாங். மதுரை மாவட்டத்தில் வாழும் மனிதர்களின் எதார்த்தமான வாழ்க்கை. திரைப்படத்தை திரைப்படமாக மட்டும் பார்த்தால் அது ஒரு மைல்கல்.
அதை சமூகத்திற்கு எதிரானது என்று நினைத்தால் அது கொஞ்சம் நெருடல் தான். நான் சிறுவயதில் நிறைய அவார்ட் பிலிம் தான் நிறைய பார்ப்பேன். அதுபோல தான் இதுவும்.
இளையராஜா மியூசிக் ரசிகருக்கு மிகப் பெரிய விருந்து. சினிமோட்டோகிராபி வாயை பிளக்க வைக்கிறது. ஆரம்ப முதல் முடிவு வரை மண்ணின் மணம் மணக்குது.

திருநங்கைகள் வலி நம் இதயத்தில் கடக்கிறது. இனி அவர்களை பார்த்தல் வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது. இதில் தான் இந்த படத்தின் வெற்றி தொடங்குகிறது.
மனித நேயம் ஒரு மருத்துவமனையில் வெளிப்படுகிறது. டோரதி நடிகை நெஞ்சை அள்ளுகிறார். மனசில் மேகங்கள் போல கூட்டம் கூட்டமாக நகர்கிறது.
குழந்தை பருவ காட்சிகள் எனது மாணவ பருவத்தை அசை போட வைத்தது. எல்லாம் வேடிக்கை மனிதர்கள். படம் முடிந்த பிறகு கூட இசை மலை காற்று எல்லாம் கண்ணில் வந்து போகிறது.
(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)
அழகு தமிழ் ராகத்திலே ஆனந்தமாய் மெட்டு எடு அன்பாக மாமன் நெஞ்சம் அடியே நீ தொட்டுவிடு!
நான் நிரந்தரமானவன்.. திருச்சியில் அரங்கேறிய மரபுப் பா கவியரங்கம்!
கணினிக் கல்யாணி.. A Science சிறுகதை!
நவீன நல்லதங்காள்!
சப்த கன்னியர், சப்த மாதர்கள் இரண்டும் ஒன்றா?
Dorothy Quick Review: திருநங்கைகளை இனி பார்த்தால் வணங்க வேண்டும்..!
நல் வாழ்வியல் சிந்தனைகள்.. பாராட்டினால் மகிழ்ச்சி.. அறிவுரை என்றால் கசக்குது!
Tuesday Thoughts: அவர்களை விடுங்கள்! நிம்மதியாகப் போகட்டும்!
புரட்டாசி மாதம் விரதம் இருப்பதெல்லாம் சரி.. என்னெல்லாம் சாப்பிடலாம்.. இந்தா பிடிங்க லிஸ்ட்!
{{comments.comment}}