சென்னை: தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு தம்பி ஞானசேகரன் என்று கூறிப் பேசியது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. இந்த நிலையில் அப்பாவு, குறிப்பிட்டுப் பேசிய ஞானசேகரன் யார் என்பது குறித்து பத்திரிகையாளர் நிரஞ்சன் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தம்பி ஞானசேகரன் என்று சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டது, அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் சிக்கிக் கைதான ஞானசேகரனைத்தான் என்று சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இதை மறுத்து பத்திரிகையாளர் நிரஞ்சன் குமார் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அவர்கள் பேசியது தொடர்பாக சில வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருவதால் விளக்கங்களை அளிக்க வேண்டி இருக்கிறது

முதலில் அப்பாவு அவர்கள் பேசியது நான் எழுதிய இந்தியா வென்றது புத்தகத்தின் வெளியிட்டு விழா. அதனால் அதற்கான விளக்கத்தை நான் அளித்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
விழாவிற்கு நிறைய பேர் வந்திருந்தார்கள் அதில் ஒருவர் பெயர் ஞானசேகரன். எனக்கு தனிப்பட்ட முறையில் இவர் யார் என்று தெரியாது. பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடக்கும் புத்தக வெளியீட்டு விழா என்பதால் பொதுமக்களில் ஒருவராகத் தான் அவர் வந்திருக்கிறார். எல் ஐ சி ஏஜெண்ட் ஆக இருப்பவர் போல அங்கிருந்த அனைவருக்கும் விசிட்டிங் கார்டு கொடுத்தார். அவருடன் வந்திருந்த இரண்டு பெண்களும் விசிட்டிங் கார்டு கொடுத்தார்கள்.
நிகழ்ச்சி தொடங்கிய போதே அவரும் மேடை ஏறி வந்து அப்பாவு அவர்களுக்கு துண்டு அணிவித்தார். வயதானவராக இருந்ததாலும் நாங்கள் யாரும் அவரை தடுக்கவில்லை.
அப்பாவு அவர்கள் அவரிடம் உங்கள் பெயர் என்ன என கேட்டார் அதற்கு அந்த நபர் ஞானசேகரன் என சொன்னவுடன், ஐயோ இந்தப் பெயர்தான் எங்களுக்கு இப்போது பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது வழக்கு கூட வேகமாக நடந்து கொண்டிருக்கிறது என சிரித்தபடியே சொன்னார்.
பிறகு தனது பேச்சின் போது எதிரில் உட்கார்ந்திருந்த அந்த எல்ஐசி ஏஜென்ட் ஆன ஞானசேகரன் என்பவர் கைத்தட்டி உற்சாகமாக இருந்தார். அதனால் தான் அவரை தம்பி என குறிப்பிட்டு அவரைக் கைகாட்டி பேசினார். அதுதான் தற்பொழுது வழக்கில் சிக்கியுள்ள ஞானசேகரனை தான் தம்பி என அப்பாவு அழைத்ததாக பரவிக் கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே வந்த பத்திரிகையாளர்கள் சிலர் சிரித்தபடியே நீங்கள் பேசியதை எப்படியும் வெட்டி ஒட்டி பிரச்சினையாக போகிறார்கள் என அப்பாவு அவர்களிடமே சொல்லி சிரித்தனர்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த தோழர் இந்திரகுமார் அப்பாவு அவர்களின் பேச்சு குறித்த விளக்கத்தையும் மேடையிலேயே தெரிவித்துவிட்டார். நடந்தது இதுதான் என்பதை தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன் அதனால் தான் இந்த பதிவு என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்
பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்
நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!
கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!
மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்
ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}