காந்தா படம் எப்படி இருக்கு? (திரை விமர்சனம்)

Nov 18, 2025,02:29 PM IST

- மைதிலி அசோக்குமார்


ஜெமினி கணேசன் சாவித்திரி காலத்து கருப்பு வெள்ளை படம். எப்படி எடுத்திருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டே படம் பார்த்தால், ஆர்ட் டைரக்டர் நம் கண் முன்னே செட் போட்டு சிறப்பாக படத்தை வடிவமைத்து உள்ளார். .Trans period கதைக்களம் என்பதால் நிறையவே மெனக்கெட்டு பார்த்து பார்த்து காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். சினிமா ரசிகர்கள் விரும்பும் அம்சங்கள் பொருந்தி உள்ளது. அந்த கால சினிமா படம் எடுக்கும்.. பாணியை கண்முன்னே காட்சிப்படுத்தியுள்ளார்கள்.  


இதற்கு முன் சர்வர் சுந்தரம், இருவர், அவ்வை சண்முகி போன்ற படங்களில் indoor shooting spot கள் திரையில் கண்ட ரசிகனுக்கு மற்றும் ஒரு treat. கதைக்களம் கிட்டத்தட்ட இயக்குனர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் திரைப்படத்தை ஒத்து உள்ளது. Characterisation , Artist selection...என எல்லாமே ஏதோ முன்பே பல படங்களில் பார்த்த காட்சிகளை ஞாபகப்படுத்துகிறது..


நாயகன் துல்கர் சல்மான். படத்தின் பெரும்பகுதி அவரை சுற்றியே வலம் வருகிறது.‌ நாயகியாக புதுமுகம்.  மலையாள நடிகை கீர்த்தி சுரேஷின் junior version




இயக்குனர்: செல்வமணி செல்வராஜ் 


இசையமைப்பாளர்: ஜானு  சந்தர் & ஜேக்ஸ் பீஜய்...பரவாயில்லை. நன்கு ரசிக்கும் படியாக மெலடிகள் கொடுத்துள்ளார்.‌ சின்ன சின்ன காதல் பாடல்கள்,... முதல் பாதியில் வந்து போகின்றன. டைட்டானிக் ஜோடி ஆடும் dressing style &  footsteps ..&  setting......miss பண்ணீடாதீங்க... அப்புறம் ரொம்ப வருத்தப்படுவீங்க.. ரகம்.‌


BGM: பழைய காலத்தில் ஆரம்பித்து Modern காலம் வரை all types of mixture combo. 


கதை: ஆதரவற்ற இளைஞனின்..( துல்கர்) நடிப்பு திறமை கண்டு அவனை தன்னோடு அழைத்துச் சென்று நடிக்க கற்றுக் கொடுத்து  நாயகன் ஆக்குகிறார் டைரக்டர் (சமுத்திர கனி) . பத்து வருடத்தில் நடிப்பில் கிங் என்று பெயர் வாங்கி விடுகிறார்.


வளர்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு அவர்களுக்கு ஏற்ப நடிக்க ஆசைப்படுகிறார் நம்ப Hero.  அதனால் டைரக்டர் & ஹீரோ ego clashes.  படம் பாதியில் நிறுத்தப்படுகிறது. 


சினிமா கம்பெனி திவால் ஆகாமல் தடுக்கவும்  வேலை செய்யும் ஊழியர்கள் நலம் கருதியும்....  படம் எடுக்க டைரக்டரையும் நாயகனையும் ஒன்றினைத்து மறுபடியும் படம் தொடங்குகிறது.


டைரக்டர் தன் துருப்பு சீட்டாக பர்மாவில் இருந்து அகதியாக வந்த நாயகியை தேர்வு செய்து சத்தியம் வாங்கிக் கொண்டு களம் இறங்குகிறார்.  நாயகியும் தன் குரு சொல்லி கொடுத்தபடியே ஆரம்பத்தில் நடிக்கிறார். நாளடைவில் நாயகனின் நடிப்பில் மயங்கி இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள்.‌


இது டைரக்டர், நாயகனின் பணக்கார மாமனார் இருவருக்கும்  வெறுப்பை உண்டாக்குகிறது. Shooting முடிந்து கடைசி நாளில் நாயகி சுடப்பட்டு இறந்து கிடக்கிறார். அருகே டைரக்டர் மட்டும் அமர்ந்து உள்ளார்.‌


யார் கொலையாளி??? ஏன் கொலை செய்தார்??? என்று துப்பறியும் ராணா டைப்பில் இரண்டாம் பாதி நகர்கிறது. 


டைரக்டர் மற்றும் முன்னேற துடிக்கும் நாயகனாக அவரவர் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறி காரணங்கள் கற்பிக்கிறார்கள். 


தான் பார்த்து வளர்த்த கிடா மார்பில் முட்டுவதை தாங்கிக் கொள்ள முடியாத  இயக்குனராக சமுத்திரக்கனி... படம் முழுவதும்   ஏமாற்றத்தினால் வரும் வெறுப்பை கண்களில் காட்டி நடித்துள்ளார்.


Ego, ஆணவம் அகங்காரம் கொண்டு திரியும் தன்  சீடனை ஒரு case ல் மாட்டி விட்டு பாடம்(!!!!) கற்பிக்கும் குரு...?? ?  மனைவிக்கு துரோகம் செய்து காதலிக்கு மாலை இட துடிக்கும் நாயகன்? ??? குருவுக்கு கொடுத்த சத்தியத்தை மீறி எல்லை தாண்டி உறவு கொள்ளும் நாயகி??? ஏமாற்றிய காதலியை சுட்டு கொல்லும் நாயகன்???? ...தானே சுட்டுக் கொண்டு சாகும் இயக்குனர்???? மனசாட்சி இல்லாமல் வாழ்க்கையில் மறுபடியும் நடிக்க கிளம்பும் நாயகன்....ஆமாம் கடைசியா என்ன தான் சொல்ல வராங்க????? என்று தெரியாமல் படத்தை நீளமாக 2.43 மணி நேரம் நகர்த்தி இருக்கிறார்கள்.‌


இருந்தாலும் பல இடங்கள் ரசிக்கும் படியாக இருக்கிறது. துல்கர் சல்மான் ... டைரக்டர் சொல்லி கொடுக்கும் 4  stepக்கு  accurate..heavy emotions  &  .., கண்ணாடியில் முட்டிக்கொள்ளும் காட்சி, கடைசியாக இறந்த காதலியை மடியில் போட்டு கொண்டு அழும் காட்சி, பிரமாதப்படுத்தியுள்ளார்.


நாயகி... நடிப்பு முகபாவம் ஐஸ்வர்யா ராய் சாயல் வந்து போகிறது.. (உபயம்: dubbing Artist.) நாயகனின் பணக்கார மனைவியாக நடிக்கும் நடிகை காயத்ரி..அலட்டி கொள்ளாத நடிப்பு ...did justice to her role,  இருபக்கமும் சமாளிக்கும் assistant man..., .நீண்ட நாட்களுக்கு பின் character artist நிழல்கள் ரவி திரையில் தோன்றுகிறார்...


Side artist  .. அனைவருக்கும். அந்த காலத்துக்கேற்ப பொருந்தும்  realistic  make up....,  நீண்ட நெடிய உருவம் modern ராணா... துப்பறியும் கண்களில் மின்னல்... ஒளி.. எகத்தாளமான வசனங்கள்.‌  கயிற்றில்  தொங்கி ஆடும் நடனம்,  அதற்கு ஏற்ப அரங்க வடிவமைப்பு, மெலடி மெட்டுக்கள், கருப்பு வெள்ளை, கலர் சீன் மாற்றம் என்று பல claps கள் அள்ளுகிறது.. .. சாந்தா ஓஓஓ sorry.  Rap song நிறைவு  தந்த  Logic இல்லா magic  காந்தா.


(செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த மைதிலி அசோக்குமார், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விவசாயிகளே.. உங்களுக்கு சில நற்செய்திகள்.. வாங்க வந்து படிங்க இதை!

news

தாலி இவ்ளோ அசிங்கமா காமிச்சது சரியில்ல: இயக்குனர் கே. பாக்கியராஜ்

news

சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்

news

நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!

news

வாக்காளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.. இணைய வழி திருத்தம்.. தேர்தல் ஆணையம் ஏற்பாடு

news

காந்தா படம் எப்படி இருக்கு? (திரை விமர்சனம்)

news

காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!

news

பெருவெள்ளமா.. நீங்க வாங்க சந்திக்க நாங்க ரெடி.. கெத்தாக காத்திருக்கும் பள்ளிக்கரணை!

அதிகம் பார்க்கும் செய்திகள்