காத்து வாக்குல ஒரு காதல்.. 2 நாயகிகள்.. உண்மைக் காதல்.. உள்ளத்தை உரசும் ஒரு படம்!

Jan 02, 2024,04:09 PM IST
சென்னை: இரண்டு கதாநாயகிக்குள் நடக்கும் உண்மை காதலைப் மையமாகக் கொண்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் இளம்பெண்ணின் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ள படமாக உருவாகியுள்ளது "காத்து வாக்குல ஒரு காதல்" திரைப்படம்.

மாஸ் ரவி பூபதி காத்து வாக்குல  ஒரு காதல் திரைப்படத்தை எழுதி, இயக்குவது மட்டுமல்லாமல் நாயகனாகவும் நடித்து அசத்தியுள்ளார். இப்படத்தில்  லட்சுமி பிரியா மற்றும் மஞ்சுளா என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்தியா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார் சீனிவாசன், கபாலி விஸ்வந்த், மேனக்சன் மீப்பு, மொசக்குட்டி பிரியதர்ஷினி, பிரியங்கா ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



இப்படத்தை ராஜதுரை ஒளிப்பதிவு செய்ய,  ஜி.கே.வி இசையமைத்துள்ளார். காத்து வாக்குல  ஒரு காதல் படத்தை சென்னை ப்ரடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் ரசிகர்களுக்கு ஏற்ப காதல், காமெடி, ஆக்சன், திரில்லர், எமோஷனல் ,என கமர்சியல் திரைப்படமாக உருவாகி  வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, கேரளா போன்ற  பல்வேறு பகுதிகளில் படமாக்கி வருகின்றனர்.



காற்றை யாரும் பார்க்க முடியாது. உணரத்தான் முடியும். அதுபோல காதல் கருப்பா, சிவப்பா பார்க்க முடியாது. சுவாசிக்கத் தான் முடியும் என  இரண்டு கதாநாயகிக்குள் நடக்கும் உண்மை காதலை மையமாகக் கொண்டு இப்படம்  உருவாகியுள்ளது. வடசென்னை பின்னணியில், தற்போது  இளம் பெண்களின் வாழ்க்கை சமூக வலைதளங்களில் எப்படி சீரழிகிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இப்படத்தை படமாக்கி இருக்கின்றனர்.



சமீபத்தில் தான் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலாவதுடன், ரசிகர்களை கவர்ந்தும் வருகிறது.



ஏற்கனவே காத்து வாக்குல ரெண்டு படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும், நயன்தாரா, சமந்தா என இரு நாயகிகள் நடித்து வெளிவந்த படம்  ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்தது நினைவிருக்கலாம். தற்போது அதேபோல் காத்து வாக்குல ஒரு காதல் படத்திலும் காதலை மையமாகக் கொண்டு இரண்டு நாயகிகளும், ஒரு நாயகனும் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையும் எந்த அளவுக்கு ரசிகர்களை சென்று சேர்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!!

சமீபத்திய செய்திகள்

news

சஞ்சு சாம்சன் போவாருன்னு பார்த்தா.. ராகுல் டிராவிட் ராஜிநாமா.. என்ன நடக்குது?

news

அண்ணாமலை மற்றும் தவெக குறித்து விமர்சிக்க வேண்டாம்: அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே... சொன்னீங்களே செஞ்சீங்களா ?: நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

ஒரே மேடையில் அண்ணாமலை- இபிஎஸ்: எனது சகோதரர் அண்ணாமலை-இபிஎஸ்!

news

என்ன நடக்கிறது... கூட்டணி மாறுகிறதா?... தேஜ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்!

news

இந்தியப் பொருளாதாரம் 6.8% வரை உயரும்.. பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்

news

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையில் இடியை இறக்கிய வாஷிங்டன் கோர்ட்.. வரி விதிப்பு செல்லாது!

news

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 உயர்வு!

news

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு...ஆர்சிபி அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்