டோக்கியோ: கபோசு நாய் காலமாகி விட்டது.. கபோசு நாய் என்று சொல்வதை விட "doge" மீம்களின் நாயகி என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு உலகப் புகழ்பெற்ற முகத்தைக் கொண்டது இந்த நாய்.
ஷிபு இனு ரக நாயான இதன் தோற்றத்தை வைத்துத்தான் ஷிபு இனு கிரிப்டோகாயின் உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதும் இந்த நாயின் உருவத்தைப் பயன்படுத்தி பலரும் மீம்ஸ் போட்டு கலக்கி வந்தனர். அந்த அளவுக்குப் பிரபலமானது இந்த நாய். இடையில் கூட இந்த நாயின் முகத்தை தனது எக்ஸ் தளத்தின் லோகோவாக மாற்றி கலகலப்பை ஏற்படுத்தியிருந்தார் எலான் மஸ்க் என்பது நினைவிருக்கலாம். சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கபோசு நாய் தற்போது இறந்து விட்டது.
முதலில் "doge" மீம்ஸ் மூலமாக கபோசு நாய் பிரபலமானது. இதையடுத்தே இதை இன்ஸ்பிரேஷனாக வைத்து கிரிப்டோகாயின்கள் உருவாக்கப்பட்டன. கிரிப்டோ கரன்சி துறையில் இந்த நாயை வைத்து ஏகப்பட்டது நடந்துள்ளது. ஜப்பானின் நரிடா நகரில்தான் கபோசு வசித்து வந்தது. அதன் இறுதிச் சடங்குகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக அதன் உரிமையாளர் அட்சுகோ சாடோ அறிவித்துள்ளார்.
மரணத்திற்கு முன்பு தனது தோளில் சாய்ந்து கபோசு படுத்துத் தூங்கியதாகவும், தூங்கப் போவதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். தூக்கத்திலேயே கபோசு உயிர் பிரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2022ம் ஆண்டு கபோசுவுக்கு கல்லீரல் நோய் வந்திருப்பதும், லூக்கேமியா வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது நினைவிருக்கலாம். கபோசுவின் உரிமையாளர் கூறுகையில், உலகிலேயே மிகவும் சந்தோஷமான நாய் கபோசுதான். இப்போது கூட அது தூங்குவது போல எங்களுக்கு அருகே படுத்துள்ளது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?
{{comments.comment}}