டெல்லி: 69வது தேசிய திரைப்பட விருதுகளில், கடைசி விவசாயி படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. பெரிய அளவில் இந்த முறை தமிழுக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
69வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. அதில் தமிழுக்கு ஓரளவுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. அதுகுறித்துப் பார்க்கலாம்.

மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி படத்துக்கு 2 விருதுகள் கிடைத்தன. அப்படத்தில் நடித்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு குறிப்பு விருது கிடைத்தது. அதேபோல தமிழில் சிறந்த படமாக கடைசி விவசாயி தேர்ந்தெடுக்கப்பட்டது. வயலின் இசைமேதை டி.என்.கிருஷ்ணன் பற்றிய ஆவணப் படத்துக்கும் விருது கிடைத்துள்ளது.

திரைப்படங்கள் அல்லாத பிரிவில் தமிழுக்கு குறிப்பிட்ட சில விருதுகள் கிடைத்துள்ளன. கருவறை குறும்படத்துக்காக.. ஸ்ரீகாந்த் தேவா விருது பெற்றுள்ளார். அதேபோல பி. லெனின் இயக்கிய சிற்பிகளின் சிற்பங்கள் குறும்படத்துக்கு சிறந்த கல்வித் திரைப்பட விருது கிடைத்துள்ளது. பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு ஏக் தா கான் குறும்படத்துக்கு விருது கிடைத்துள்ளது.

ஆர். பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தில் பாடியிருந்த பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்துக்கு இசையமைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}