புதுச்சேரி : வாழ்க்கை எளிமையானது, எளிமையாக வாழ வேண்டும். எளிமையாக அனைத்தையும் கடந்து செல்ல வேண்டும் என பலர் அட்வைஸ் பண்ணுவதை கேட்டிருப்போம். ஆனால் சில வலிகளை அவ்வளவு சீக்கிரம் கடந்து செல்ல முடியாது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கடந்து வந்த பாதையில் நிறைய வலிகள், ஆறாத ரணங்கள், மறக்க முடியாத நினைவுகள் இருக்கத் தான் செய்யும்.
இதை அழகாக, அழுத்தம் திருத்தமாக, வார்த்தைகள் அதிகம் இல்லாமல், மனதை கீறும் வகையில் பதிவு செய்துள்ளது கடற்கரை குறும்படம்.
யாருடைய துணையும் இல்லாமல் தனியாக வாழ்க்கை நடத்தும் சிறுவன். தன்னுடைய தேவைகளுக்காக வீடு வீடாக நோட்டீஸ் போட்டு, அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு வாழ்க்கையை நடத்துகிறான். நிறைய ஏக்கங்கள், வலிகள், போராட்டங்கள் ஆகியவற்றை தனக்குள் அடக்கிக் கொண்டு அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கிறான். யாரையும் எதிர்பார்க்காமல் சுயம்புவாக முளைத்து வர வேண்டும் என வாழ்க்கையுடன் போராடும் அனைவருக்கும் கிடைக்கும் மிக சிறந்த உரம், அவமானங்கள் தானே. அந்த உரம் அவனுக்கும் கிடைக்கிறது.
வாழ்க்கையும், வாழ்க்கை தரமும், தோற்றமும், பொருளாதார நிலையும் எவ்வளவு தான் உயர்ந்தாலும், மாறினாலும் குழந்தை பருவம் முதல் வாலிப பருவம் வரை அவனுக்கு துணையாக, ஆறுதலாக இருக்கும் ஒரே விஷயம் கடற்கரை. அத்தனை கொந்தளிப்புகள், அலைகள், சீற்றங்கள், ஆர்ப்பரிப்புகள் மட்டுமல்ல, அளவிட முடியாத பொக்கிஷங்களையும் தனக்குள் அடக்கி வைத்திருந்தாலும் அமைதியாக அவ்வப்போது வந்து கரையை தொட்டு விட்டு, பலருக்கும் ஆறுதல் கொடுத்து விட்டு செல்லும் கடலும், கடற்கரையும். அதே போல் தனக்குள் எத்தனை போராட்டங்கள் இருந்தாலும் அனைத்தையும் அடக்கிக் கொண்டு ஆறுதலுக்காக கடற்கரைக்கு வந்து செல்கிறான் அந்த இளைஞன். அன்று யாருமற்ற ஏழை சிறுவனாக...இன்று ஒரு இயக்குனராக...!
ஒரு இளைஞனின் வாழ்க்கையில் சிறு வயது முதல் நடக்கும் வாழ்க்கை போராட்டங்கள், பொருளாதார மாற்றங்கள், வலிகள் ஆகியவற்றை கிட்டத்தட்ட ஏழரை நிமிடத்தில் மிக அளிமையாக, அருமையாக, அதே சமயம் ஆழமாக பதிய வைத்துள்ள படம் தான் கடற்கரை என்ற குறும்படம். புதுச்சேரியைச் சேர்ந்தவரான இளம் இயக்குனர் ஜெரன் ஸ்டீபன் எழுதி, இயக்கி, நடித்துள்ள படம். விஷூவல் கம்யூனிகேஷன் மாணவரான ஜெரன் ஸ்டீபனின் இந்தப் படைப்பு எளிமையாக பல செய்திகளை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. சந்தோஷின் மெல்லிய இசை மனதில் ரணத்தின் வலியை உணரச் செய்து, இதமளிக்கிறது. ரஞ்சித், அகஸ்டின் ஆகியோரும் தங்களின் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக, இயல்பாக செய்துள்ளனர்.
இயக்குனர் மட்டுமல்ல இதில் நடித்தவர்களும் இயக்கத்திற்கும், நடிப்பிற்கும் புதியவர்களை போல் இல்லாமல் அனுபவம் வாய்ந்தவர்களை போல் தங்களின் பணியை செய்திருப்பது பாராட்டுக்குரியது. மொத்தத்தில் கடற்கரை...பார்ப்பவர்களின் மனங்களில் தடத்தை ஆழமாக பதிக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
{{comments.comment}}