சென்னை: ஏதாவது கூட்டம் நடந்து விட்டால் போதும்.. அங்கு திடீரென அஜீத்தே கடவுளே என்ற குரல் ஒலிக்கும்.. கல்யாணமா, திருவிழாவா, கச்சேரியா.. எதுவாக இருந்தாலும் இந்தக் குரல் இப்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. விஜய்யின் தவெக மாநாட்டிலும் கூட இந்த குரல் ஒலித்ததைப் பார்த்தோம்.
தன்னை தல என்றோ அல்ட்டிமேட் ஸ்டார் என்றோ அல்லது வேறு பட்டப் பெயர் சொல்லியோ கூப்பிட வேண்டாம் என்று அஜீத் திட்டவட்டமாக பகிரங்கமாக அறிக்கையே விட்டார். ஏன் தனது ரசிகர் மன்றங்களையும் கூட அவர் கலைத்து விட்டார். பெயரைச் சொல்லி மட்டுமே கூப்பிடுங்கள் என்றும் கூறி விட்டார். ஆனால் ரசிகர்கள் திருந்தியபாடில்லை.
அன்பின் வெளிப்பாடாக அவர்கள் வேறு விதமாக இப்போது அஜீத்தை அழைக்க ஆரம்பித்துள்ளனர். அதுதான் இந்த அஜீத்தே கடவுளே.. இதை யார் சொல்ல ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனால் இப்போது எங்கு பார்த்தாலும் இந்த கோஷம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. பார்ப்பவர்கள், கேட்பவர்களை எரிச்சல் அடையும் வைக்கும் அளவுக்கு இது போக ஆரம்பித்துள்ளதுதான் இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டியது.
சமயா சந்தர்ப்பம் இல்லாமல் எல்லா இடத்திலும் இப்படி கூச்சல் போட ஆரம்பித்துள்ளனர். இவர்கள் அஜீத் ரசிகர்களாக மட்டும் இல்லாமல் பப்ளிசிட்டியை விரும்புவோரும் கூட இப்படி பொது இடங்களில் கூச்சல் போடுவது பலரையும் எரிச்சலாக்க ஆரம்பித்துள்ளது.
இன்று திருப்பூரில் அமமுக தலைவர் டிடிவி தினகரன் பிறந்த நாளையொட்டி நடந்த மராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் திடீரென அஜீத்தே கடவுளே என்று பலத்த குரல் எழுப்பி கோஷமிட ஆரம்பித்தனர். இதைப் பார்த்த தினகரன் திடுக்கிட்டுப் போனார். ஏன் திடீர்னு இப்படிக் கத்தறாங்க என்று விழித்த அவர், நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலப்பா என்று மைக்கிலேயே கூறினார்.
இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் போடப்படும் இந்த கோஷத்தால் அஜீத் மீது பலருக்கும் அதிருப்தி ஏற்படவே வாய்ப்புள்ளது. ஆனாலும் அஜீத் ரசிகர்கள் தங்களது அபிமான நட்சத்திரத்தைக் கொண்டாட கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் கோலடிக்கவே முயற்சிக்கிறார்கள்.
ஒரு காலத்தில் கமல்ஹாசனை ஆண்டவரே என்று ரசிகர்கள் அழைத்தார்கள். அவரும் கூட தன்னை எந்தப் பட்டப் பெயரிலும் அழைக்க வேண்டாம் என்று சமீபத்தில்தான் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் இப்போது அஜீத்தை கடவுளாக்கி விட்டார்கள் அவரது ரசிகர்கள்.
1000 பெரியார் வந்தாலும்..!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}