இந்தியாவுக்கு எதிராக நாங்கள் பேசவில்லை.. "கைலாசா தூதர்" விஜயப்பிரியா விளக்கம்!

Mar 03, 2023,09:24 AM IST

சென்னை: இந்தியாவுக்கு எதிராக நாங்கள் பேசவில்லை. இந்தியாவை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறோம். நித்தியானந்தாவுக்கும், கைலாசாவுக்கும் எதிராக சில இந்து விரோதிகள் செயல்படுகிறார்கள். அவர்களைத்தான் நாங்கள் குற்றம் சாட்டிப் பேசினோம் என்று "கைலாசா நாட்டின் ஐ.நாவுக்கான நிரந்தரத் தூதர்" விஜயப்பிரியா நித்தியானந்தா விளக்கியுள்ளார்.


பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு மோசடிப் புகார்களில் சிக்கி இந்தியாவை விட்டு தப்பி ஓடி தலைமறைவாக இருக்கிறார் நித்தியானந்தா. இவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கைலாசா என்ற தனி நாட்டை நிர்மானித்திருப்பதாக இவர் அறிவித்தபோது பலரும் சிரிப்பாய் சிரித்தனர். ஆனால் ஆச்சரியப்படவும் செய்தனர்.. உண்மையிலேயே இவர் தனி நாடு அமைத்திருக்கிறாரோ என்று.


மார்ச் 03 - இந்த நாளுக்குரிய ஸ்பெஷல் என்ன தெரியுமா ?


ஆனால் விளையாட்டுத்தனமாய் பார்க்கப்பட்ட நிதந்தியானந்தா தற்போது செய்து வரும் செயல்கள் அனைவரையும் அதிர வைத்துள்ளன. ஜெனீவாவில் உள்ள ஐ.நா.  கூட்டத்தில் பெரிய கொண்டை போட்ட இவரது பெண் சாமியார்கள் உட்கார்ந்து அதுதொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் போட்டு அதிர வைத்துள்ளனர். 


ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தரத் தூதர் என்று விஜயப்பிரியா நித்தியானந்தாவை டிவிட்டரில் கைலாசா டீம் அறிமுகமும் செய்து வைத்தது. அவர் ஐ.நா. கூட்டத்தில் பேசுகையில், இந்தியாவைக்  குறை கூறிப் பேசியதாகவும் பரபரப்பு எழுந்தது. இந்த நிலையில், தற்போது விஜயப்பிரியா ஒரு விளக்கம் கொடுத்து வீடியோ போட்டுள்ளார்.


அதில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் பேசவில்லை. இந்தியா மீதும், இந்து மதம் மீதும் நாங்கள் மிகப் பெரிய மரியாதை வைத்துள்ளோம். நித்தியானந்தாவுக்கு எதிராகவும், கைலாசாவுக்கு எதிராகவும் சில இந்து விரோதிகள் செயல்படுகின்றனர். அதைத்தான் நாங்கள் சுட்டிக் காட்டினோம். இவர்கள்தான் நித்தியானந்தாவுக்கு எதிராக அவர் பிறந்த பூமியில் வழக்குத் தொடர்ந்தனர்.


ஐ.நா. சபையில் நான் ஆற்றிய உரை இந்து விரோத மீடியாக்கள் சிலவற்றால் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது, திரித்துக் கூறப்பட்டுள்ளது.  வேண்டும் என்றே இதைச் செய்துள்ளனர். இவர்கள் மீது இந்தியஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் நித்தியானந்தாவுக்கு எதிராகவும், கைலாசாவுக்கு எதிராகவும் வன்முறையைத் தூண்டுகின்றனர்.


இவர்கள் இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் கருத்துக்களைப் பிரதிபலிப்பவர்கள் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.  இப்படிப்பட்ட பிரிவினைவாதிகள் மீது இந்தியஅரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த விவகாரத்தில் யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசாவின் நிலைப்பாடு இதுதான். இந்த விளக்கம் போதுமானதாக இருக்கும் என நம்புகிறோம் என்று கூறியுள்ளார் விஜயப்பிரியா.


அய்யோ கடவுளே.. ஒன்னுமே புரியலையே..!


சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்