மும்பை : 'மா' திரைப்படத்தின் விளம்பரத்திற்காக வந்திருந்த நடிகை கஜோல், ₹59,500 மதிப்புள்ள தேவ்நாகிரி (Devnaagri) மஞ்சள் நிற புடவையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரது உற்சாகமான தோற்றமும், எடுப்பான அலங்காரமும், எளிமையான நேர்த்தியும் அனைவரையும் அசரடித்தன.
கஜோல் இயல்பாகவே அழகான நடிகை. கூடவே அபாரமான நடிப்புத் திறமையும் கொண்டவர். கஜோல் தனது சமீபத்திய பாலிவுட் படமான 'மா' படத்தின் விளம்பரப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான விழாவின்போது, தேவ்நாகிரி லேபிளின் பிரகாசமான மஞ்சள் நிற புடவையில் வந்திருந்தார் கஜோல். அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த புடவையில் மென்மையான கை ஓவிய வேலைப்பாடுகளும், நுணுக்கமான எம்பிராய்டரியும் இருந்தன.
அவர் அணிந்திருந்தது மஞ்சள் ஜார்ஜெட் கை ஓவிய எம்பிராய்டரி புடவை (Yellow Georgette Hand-Painted Embroidered Saree) ஆகும். இந்தப் புடவையின் முந்தானையிலும், அடிப்பாகம் முழுவதிலும் அழகான மலர் ஓவியங்களும், சாரி எம்பிராய்டரி வேலைப்பாடுகளும் இருந்தன. ஒரு சாடின் பார்டர் புடவையின் அழகை நிறைவு செய்தது. இந்தப் புடவையுடன், கை ஓவியங்கள் கொண்ட சண்டேரி பிளவுஸை அணிந்திருந்தார்.
.jpg)
இந்தப் புடவையின் விலை அதிகம் தான். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதன் விலை ₹59,500 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை அதிகம்தான். பாரம்பரிய உடைகளை இவ்வளவு புத்துணர்ச்சியுடனும், வேடிக்கையாகவும் காட்டுவது எளிதல்ல. ஆனால், கஜோல் சரியான சமநிலையை ஏற்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார்.
நாளை 7 மாவட்டங்களிலும், நாளைமறுநாள் 12 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலர் பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்: தவெக தலைமை அறிவிப்பு
தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி!
உலகக் கோப்பை கிரிக்கெட்... தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு DSP பதவி!
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
கோவை துயரம் மனிதத்தன்மையற்றது.. கண்டிக்க கடுஞ்சொல் எதுவும் போதாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோவையில் மாணவியிடம் அத்துமீறி அட்டூழியம் செய்த 3 குற்றவாளிகள்.. சுட்டுப் பிடித்த போலீஸ்
மீனவர்கள் கைது: ஒன்றிய-மாநில அரசுகள் இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப்போகின்றன?: சீமான்
{{comments.comment}}