இல்லத்தரசிகளின் கவனத்திற்கு.. 1000 ரூபாய் திட்டத்திற்கான உதவி மையங்கள் ரெடி!

Sep 19, 2023,01:07 PM IST

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக உதவி மையம் இன்று  முதல் செயல்படுகிறது.


திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு 2 ஆண்டுகளாகியும் செயல்படாமல் இருந்து வந்தது. 


அனைவரும் இத்திட்டம் எப்போது வரும் என்று எதிர்நோக்கி இருந்த நிலையில் செப்டம்பர் 15ம் தேதி இத்திட்டம் செயல்பட துவங்கியது. ஆனால் எல்லா பெண்களுக்கும் இந்த உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. இதற்காக சில விதி முறைகள் வைக்கப்பட்டன. 




மகளிர் உரிமைத் தொகை: அதாவது உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் வருமான வரி செலுத்தக் கூடாது, ஆண்டு வருமானம் ரூ 2.50 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது, அது போல் ஆண்டுக்கு 3600 யூனிட்கள் மின்கட்டணம் செலுத்தக் கூடாது. கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களை வைத்திருக்கக் கூடாது. முக்கியமாக அவர்கள் அரசு ஊழியர்களாக இருக்கவே கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதற்காக வீடுதோறும் ரேஷன் கடை ஊழியர்கள் கலைஞர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை கொடுத்திருந்தனர். 


அதன்படி 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1.06 கோடி பேரே தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி அவருடைய பிறந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கு தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. 


நிராகரிக்கப்பட்டோர் விண்ணப்பிக்கலாம்: இந்த திட்டத்திலிருந்து  நிராகரிக்கப்பட்டோர் நேற்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது. அதன் படி இன்று முதல் உதவி மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த உதவி மையங்கள் செயல்பட தொடங்கியது.  சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் இன்று முதல் உதவி மையம் செயல்பட தொடங்கியது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பயனாளிகள் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.


நிராகரிக்கப்பட்ட 56.60 லட்சம் பேருக்கு நிராகரித்ததற்கான காரணங்கள் இன்று முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது எனவும் நிராகரிக்கப்பட்டதன் காரணங்களை அறிந்து கொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிப்பு, விண்ணப்பம் ஏற்கப்பட்டும் ரூ 1000 உதவித்தொகை கிடைக்காதவர்களும் இந்த உதவி மையத்தை நாடி சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.


உதவி மையங்கள்: இத்திட்டத்திற்காக சென்னை மாநகராட்சி அலுவலகம் மற்றும் மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களிலும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது


விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது, மீண்டும் விண்ணப்பங்கள் பதிவு செய்வது, ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் வங்கி கணக்குக்கு உரிமைத் தொகை வராமல் இருப்பது உட்பட எந்த சந்தேகங்கள் குறைகள் இருந்தாலும் பொதுமக்கள் உதவி மையத்தை அணுகி தீர்வு காணலாம். நிராகரிப்பட்ட விண்ணப்பதாரர்கள் மெசேச்  பெறப்பட்டபின், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்