- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி
பகலவன்தோன்றும் முன் ,
பதறி துயில் எழுந்து..!!
அரக்கப் பறக்க வீட்டில்,
அனைத்தும் முடித்து ,
பேருந்தில் புளிமூட்டையாய்,
தன்னை திணித்து,
அலுவலகம் அடைந்து ,
அனைத்து வேலைகளையும் முடித்து,
மாலை விழி பிதுங்கி வீடு வந்து,
மறுபடியும் அடுக்கனையில் புகுந்து.!!

அவதி அவதியாய் ...
அனைத்து வேலையையும் முடித்து,
குழந்தைக்கு ஆசிரியராகி, அதன்
குறை கேட்டு , நிவர்த்தி செய்து,
அடுத்த நாள் மெனு தீர்மானித்து,
அயர்ந்து தூங்கச் செல்கையில்,
மணி நள்ளிரவு.
மறுநாள் அதுவே தொடர்கதை.
---
யாருக்கு தெரியும்..?
பெண்ணே!!!
நீ...நீ...நீ...நீ....எதிர்கொண்ட
போராட்டங்கள் ,சவால்கள்..!!
அவமானங்கள், மனதின் வலிகள்..!!
தூங்காத இரவுகள்,
தூங்கிய சோகங்கள் ..!!
இறந்து போன உன் ஆசைகள்!!
கனவாகிப் போன கனவுகள்!!!
யாருக்கு தெரியும்??
இன்றைய உன் வெற்றி
புன்னகை மட்டுமே!!!!
அனைவருக்கும் தெரியும்..!!
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}