கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் தாய், தந்தையை இழந்த ஒரே குடும்பத்தை சேரந்த 3 குழந்தைகளின் கல்விச்செலவை அதிமுகவே ஏற்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு 74 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் நேற்று முதலில் உயிரிழந்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை தற்பொழுது அதிரித்துக் கொண்டே வருகிறது.

இதில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் என பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை தற்போது அளிக்கப்பட்டு வருகிறது. இறுப்பினும் அடுத்து அடுத்து பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் இடையே பதட்டம் நிலவ வருகிறது.
இந்த சம்பவத்திற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்ததோடு, கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மாவட்ட காவல்துறையின் பலர் சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளனர்.கள்ளச்சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2000 மேற்பட்ட போலீசார் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறி வருகிறார். மேலும், அங்கு சிகிச்சை பெற்று வருபர்களை விசாரித்தும் வருகிறார்.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் தாய், தந்தையை இழந்த ஒரே குடும்பத்தை சேரந்த 3 குழந்தைகளின் கல்விச்செலவை அதிமுகவே ஏற்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அத்துடன், அடுத்த 10 ஆண்டுகளுக்கு,அதிமுக அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.5000 வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
வந்தே மாதரம்.. 150வது ஆண்டைக் கொண்டாடும் இந்தியாவின் தேசியப் பாடல்!
மீண்டும் சரிவை நோக்கி சரிந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.400 சரிந்தது!
அறிவுப்பூர்வமான செய்தியாளர்கள் அருகிப் போனது ஏன்?
கலைஞானி கமல்ஹாசன் 71.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
{{comments.comment}}