கல்வியா?? செல்வமா??வீரமா?? (கவிதை)

May 21, 2025,04:23 PM IST

- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி


கல்வி


கல்வியே வாழ்வின் கலங்கரை விளக்கம் ..!!

கல்வியே ஏற்றமிகு வாழ்விற்கு  அச்சாணி ..!!


கல்வியே தன்னம்பிக்கையின் சுடர்ஒளி ..!!

கல்வியே  ஏழு தலைமுறைக்கும் மூலதனம்..!!


கல்வியே வறுமையை போக்கும் கவசம்  ..!!

 கல்வியே எவரையும் வசப்படுத்தும் சக்தி..!!


அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் ..!!

அறிவு என்னும் பெட்டகத்தை திறக்க உதவும்  சாவி..!!


 அறியாமையை அகற்றும் அற்புத விளக்கு..!!

அழிவற்ற கல்வியே மனிதவாழ்வின் திருப்புமுனை..!!


--


செல்வம் 




வாழ்க்கை என்னும் ஓடத்தில் இதுவே பாய் மரம் ..!!

வாழ்வின் அடிப்படைத் தேவை பொருட் செல்வம்..,!!


செல்வம் என்பது பொன் பொருள் மட்டுமல்ல ..!!

செல்வத்துள் சிறந்த செல்வம் கல்விச் செல்வம்..!!


ஆரோக்கியம் அனைவருக்கும் அரிய செல்வம் ..!!

அன்பு  அமைதியான வாழ்விற்கான செல்வம் ..!!


உழைப்பின் வேர்வையில் கிடைக்கும்  செல்வம்..!!

உணவு ,உடை, உறையுள்..க்கு  தேவை செல்வம்..!!


அளவோடு இருந்தால் வாழ்வில் நிம்மதி..,!!

அளவுக்கு மிஞ்சினால் அனைத்தும் நஞ்சு ..!!


---


வீரம்


அநீதியால் இருள் சூழ்ந்த தேசம்,..!!

அவலத்தின் அழுகுரல் எங்கும் ஓலமிடுகிறது..!!


தனித்தே எழுகிறான் வீரன் ஒருவன்..!!

தர்மத்திற்காக போராடி நீதிக்காக வாழ்ந்து ...


அக்கிரமத்தின் ஆணவத்தை அளிக்கிறான்.

அநியாயத்திற்கு எந்த  நிலையிலும் ...


அடிபணியாமல்  வீறு கொண்டு எழுகிறான்.

வீரத்தின் அடிப்படை இலக்கணம் இதுவே..!!


அயர்ந்து சோர்ந்து  இருந்த உள்ளங்களுக்கு ...

ஊக்கம் அளித்து  புதுவாழ்வு படைக்கிறான்..!!


இதுவன்றோ வீரம்..!!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார்.  கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

news

ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

news

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1996 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்!

news

தமிழ் தெரிந்தவர்களுக்கு வடபழநி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்

news

மணக்கமணக்க சாப்பிடலாம்.. மதுரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா 2025.. சுவைக்க வாங்க!

news

இலவச விமானப் பயணம்.. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தரும் அசத்தலான சலுகை!

news

சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!

news

தங்கம் விலை நேற்று மட்டும் இல்லீங்க இன்றும் உயர்வு தான்... அதுவும் சவரனுக்கு ரூ.440 உயர்வு!

news

தேனியில் விவசாயிகளுடன் இணைந்து ஆடு மாடு மேய்ப்பேன்.. சீமானின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்