- மஞ்சுளா தேவி
சென்னை: உலக நாயகன் கமலஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, கமல்ஹாசன் நடிக்கும் 234 வது படத்தின் டைட்டில் வீடியோ நவம்பர் 6ஆம் தேதி மாலை 5 மணிக்கு, அதாவது இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் கடந்த ஆண்டு 2022 , ஜூன் 3ஆம் தேதி வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியன்-2 படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர் .
இந்நிலையில் நாளை கமல்ஹாசன் தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். பிறந்த நாளை முன்னிட்டு கமல் நடித்த புதுப்படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது. அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகவுள்ளது. இந்த செய்தி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் மணிரத்தினம் 36 ஆண்டுகளுக்குப் பின் கமலுடன் மீண்டும் இணைந்து புது படத்தை இயக்குகிறார். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ரவி கே .சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, இசைப்புயல்
ஏ .ஆர் ரகுமான் இசையமைக்கிறார். சண்டைப் பயிற்சி அன்பறிவு மற்றும் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த மெகா கூட்டணியில் இணைகிறார்கள்.
இன்று மாலை படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை வித்தியாசமான ஸ்டில்லுடன் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த ஸ்டில் இப்போது வைரலாகியுள்ளது. ஸ்டில்லே இப்படி இருந்தால் டைட்டில் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாரதியாரின் பாடல் வரிகளும் இடம் பெற்றிருப்பதால் நிச்சயம் புரட்சிகரமான படமாக இது இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}