தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவி காலம் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. ஜூலை 25ம் தேதி எம்பியாக பதவியேற்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன். மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உட்பட 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இந்த 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஆகியோரும், அதிமுக சார்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சுயேச்சை வேட்பாளர்களுக்கு முன்மொழிவு கடிதம் இல்லை என்பதால் அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, திமுக, அதிமுக, மநீமவைச் சேர்ந்த 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் நடத்தும் அதிகாரியான சுப்பிரமணியம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜூலை 25ம் தேதி எம்பியாக பதவியேற்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர்.
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}