சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்குப் பகுத்தறிவு கருத்துக்களை பரப்புரை செய்யும் அருமை நண்பர் கமலஹாசனுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
உலக நாயகன் என போற்றப்படும் கமலஹாசன் தனது எழுபதாவது பிறந்தநாளை இன்று சிறப்பாக கொண்டாடி வருகிறார். தமிழ் சினிமாவில் தனது ஐந்து வயதில் காலடி வைத்து கமலஹாசன் தற்போது வரை நடிகர் இயக்குனர், டான்சர், தயாரிப்பாளர் என பல்வேறு திறமைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். இன்றும் அவரின் நடிப்பை பார்த்து வியக்கும் அளவிற்கு பலரும் பாராட்டும் ஒரே கலைஞர் என்றால் அது கமலஹாசன் தான். இப்படி தனது பன்முகத் திறமையால், பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தியவர்.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், என பன்முகத் திறமைகள் மட்டும் இல்லாமல் அதற்கும் ஒரு படி மேலே சென்று, அரசியல் வாழ்க்கையிலும் பயணம் செய்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். தற்போது தக் லைஃப் என்ற படத்தில் நடித்துள்ள கமல்ஹாசனுக்கு இன்று 70 வது பிறந்தநாள் என்பதால், தக் லைஃப் பட குழு படத்தின் டீசரை வெளியிட இருக்கிறது.

இதற்கு முன்னதாக பட குழு கமலஹாசனின் பிறந்தநாள் பரிசாக படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டரில் கமல் மற்றும் சிம்பு இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் கமலஹாசனுக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தங்களின் வாழ்த்துக்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து குறிப்பில், பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்திய திரை உலகத்தின் வாயிற் கதவுகளை திறக்கின்ற கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு பகுத்தறிவு கருத்துக்களை பரப்புரை செய்யும் அருமை நண்பர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்களின் தொண்டு சிறக்க விழைகிறேன் என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி
வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
{{comments.comment}}