சென்னை: இயக்குநர் மணிரத்தினம் - கமல்ஹாசன் இணைந்திருக்கும் படமான தக் லைஃப், படப்படிப்பு வருகின்ற 18ம் தேதி சென்னை சேத்துப்பட்டில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய இந்தியன் மிகப்பெரிய வெற்றிபெற்றது. பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழையும் பொழிந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் படப்படிப்பு தற்பொழுது முடிந்துள்ளது.
இந்நிலையில், மணிரத்தினம் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் தக் லைஃப். இந்த படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தில் நடிக்க நாசரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் - மணிரத்தினம் இயக்கத்தில் நாயகன் படம் வந்து 35 ஆண்டுகளுக்கு பின்னர் தற்பொழுது இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கமல்ஹாசனின் 234வது படமான இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றது. இதன் புரமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 18ம் தேதி சென்னை சேத்துப்பட்டில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் தொடர்ந்து அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார். இந்தியன் 2 முடித்த கையோடு இப்போது தக் லைபில் இறங்கப் போகிறார். அதேபோல பிக்பாஸ் இறுதிச்சுற்றும் வந்து விட்டது. அதிலும் அவர் அடுத்து பிசியாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, கமல் - மணிரத்தினம் கூட்டணி என்பதால் இப்படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}