டில்லி : தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பி., இடங்களுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக, திமுக வேட்பாளர்களின் மனுக்கள் அனைத்தும் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதனால் ராஜ்யசபா எம்.பி.,யாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 18 ராஜ்யசபா இடங்களில் திமுக.,வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக.,வின் சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய ஆறு பேரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து ராஜ்யசபாவிற்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜூன் 19ம் தேதி தேர்தல் நடக்கும் என்றும், இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 02ம் தேதி துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு, ஜூன் 06ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். கூட்டணி கட்சிகள் சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல் அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பமனு தாக்கலுக்கான கால அவகாசம் ஜூன் 09ம் தேதி பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.
ராஜ்சபா தேர்தலுக்காக மொத்தம் கட்சி சார்பிலும், சுயேட்சையாகவும் மொத்தம் 13 பேர் 17 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனுக்களுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 10ம் தேதியான இன்று காலை நடைபெற்றது. ஜூன் 12ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறவும் கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், சுயேட்சைகள் அனைவரின் வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட அதிமுக, திமுக.,வை சேர்ந்த 6 பேரை எதிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாத காரணத்தால் இவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?
வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!
Honeymoon in Shillong: மேகாலயா தேனிலவு கொலை சம்பவம் சினிமா ஆகிறது!
மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!
ஹீலியம் கேஸை நுகர்ந்து.. சிஏ மாணவர் எடுத்த விபரீத முடிவு.. டெல்லியை உலுக்கிய சம்பவம்
நீதி தவறிய செயலுக்காக முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.480 உயர்வு
{{comments.comment}}