- காஞ்சி கிருபா
எந்தச்சலசலப்பும்
இல்லாத
ஒரு அதிகாலை
மௌனத்தில்
என்னை நானே
தொலைத்துவிட்டு !
மீண்டு வருவதற்குள்
சிறகுகளை விரித்து
எங்கெங்கோ
பறந்து செல்கிறேன்!
ஆள் நடமாட்டம்
இல்லாத
பாலை வனத்தில்
எனக்கான
பாடலை இசைத்துக் கொண்டு
செல்கையில்
வண்ணத்துப்பூச்சிகள்
என் அருகில்
வந்து செல்கின்றன

லேசான மழைத் தூறலில்
தெருவோர
தேநீர் கடைத் தேடி
நடந்து சென்ற நேரம்
மழையில் நனைந்த
ஒரு குட்டி நாயின்
சிலு சிலுப்பைக் கண்டு
பொழுது விடியாத
அந்த கணத்தில்
தூக்கிக் கொஞ்சுகிறேன்!
அலைகள் வந்து
மோதுகின்ற
கடற்கரை மணலில் !
நடந்து செல்கிறேன்
என் தனிமையை உணர!
தனிமையின்
மௌனத்தில்
மூழ்கும்போது
ஆழமான கவிதைகளை
மொண்டு வருகிறேன்
அதோ அந்த
பூஞ்சோலையின்
நறுமணமுகர்ந்து
என் விரல்களால்
எழுதி வைக்கிறேன்
முகர்ந்து கொள்ளுங்கள்
முடித்து விடாதீர்கள்
நிலாவின் வெளிச்சத்தில்
விண்மீன்களை இரசித்துக்கொண்டு
மேகங்களிடம்
என் கவிதைகளை
சொல்லிக் கொண்டிருந்தேன்
காதல் மோகமெடுத்து
அவைகள்
ஒன்றாக
கலந்து விட்டன!!
விண்மீன்கள்
மறியல் செய்தன
இவன் ஒரு
காதல் குற்றவாளி !
என் சிறகுகள்
திருப்பி
மீண்டும் வந்து சேர்கையில்
பாலைவனத்தை
தெருவோரத்தை
கடற்கரையை
பூஞ்சோலையை
என் விழிகள்
(ஜோ. கிருபானந்தம் என்கிற காஞ்சி கிருபா, 25 ஆண்டுகளாக முதுகலை தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். பட்டிமன்ற பேச்சாளர், நடுவர், சிறுகதை கவிதை கட்டுரை படைப்பாளர். விஜய் டிவி கலக்கப்போவது யாரு பார்ட் 2 நிகழ்வில் பங்கு பெற்று காமெடி கிங் விருது, சன் டிவி அசத்தப்போவது யாரு நிகழ்வில் பங்கேற்று அசத்தல் மன்னன் விருது பெற்றுள்ளேன். பல குரல் மன்னன், மேடைப் பாடகர், கிராமிய பாடல் நடன கலைஞன். இந்து தமிழ் திசை சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில் அன்பாசிரியர் விருது பெற்றவர்)
2 Kutti கதைகள்.. காலம் கடந்த பிறகு.. சமயோசித புத்தி!
தமிழகத்தில் தொடரும் மழை: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
டெல்லியில் உச்ச கட்ட பதற்றம்: கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, நேஹா போரா கைது!
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் பிரதமருக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்
காஞ்சி கிருபாவின் சிந்தனைச் சிறகுகள்!
நவராத்திரி வந்தாச்சு.. விதம் விதமாக கொலு வச்சுக் கொண்டாடத் தயாரா மக்களே?
மறுகதவு.. ஒரு நிமிடக் கதை (32)
மனமே நலமா?
கருவறைக் கல்லறை!
{{comments.comment}}