இந்தியாவுக்கு எதிரான.. 3வது டெஸ்ட் போட்டியிலும் கனே வில்லியம்சன் விளையாட மாட்டார்!

Oct 29, 2024,11:34 AM IST

மும்பை: இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே நியூசிலாந்து வென்று விட்ட நிலையில் முதல் இரு போட்டிகளிலும் விளையாடாத நட்சத்திர வீரர் கனே வில்லியம்சன், 3வது போட்டியிலும் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து - நியூசிலாந்து உள்ளூர் டெஸ்ட் தொடரில் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக கனே வில்லியம்சன் 3வது டெஸ்ட்டில் ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில் உள்ள கனே வில்லியம்சன், இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவில்லை. ஓய்வில்தான் இருந்து வருகிறார்.  தற்போது 3வது டெஸ்ட் போட்டியிலும் அவர் ஆட வேண்டாம் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 



இங்கிலாந்து அணி அடுத்த மாதம் நியூசிலாந்து செல்கிறது. இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நவம்பர் 28ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஹாக்ளி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு வில்லியம்சன் முக்கியம் என்பதால் அவருக்கு முழு ஓய்வளித்து தயார் நிலைக்குக் கொண்டு வர நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.  தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தென்படுவதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால்தான் அவரை இந்தியத் தொடரில் ஆடுவதிலிருந்து விலக்கி வைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக நியூசிலாந்து கிரிக்கெட் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 12 ஆண்டுகளில் டெஸ்ட் தொடரை உள்ளூரில் இழக்காத இந்தியா நியூசிலாந்திடம் அடுத்தடுத்து தோல்வியுற்று 0-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்து விட்டது. தற்போது 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் வருகிற வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்