பெங்களூரு: பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னட அமைப்பினரால் நடிகர் சித்தார்த் அவமானப்படுத்தப்பட்டது தொடர்பாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் மன்னிப்பு கேட்டுள்ளார்.
காவிரி பிரச்சனையால் கர்நாடகாவில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. விவசாய அமைப்புகள், கன்னட அமைப்புகள், அரசியல் கட்சிகள் இதில் பங்கேற்றுள்ளன. இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் பெங்களூரில் நேற்று எஸ்ஆர் திரையரங்கில் சித்தார்த் தயாரித்து நடித்த சித்தா திரைப்படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது சித்தார்த் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த கன்ட அமைப்பினர் சித்தார்த் பேச்சை இடைமறித்து நிறுத்தினர்.
கர்நாடகத்தில் காவிரிப் பிரச்சினை நடந்து கொண்டிருக்கும்போது உங்களது திரைப்பட நிகழ்ச்சியை நடத்துவதா, நடத்தக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர், ஆவேசமாக பேசினர். இந்த எதிர்ப்பு காரணமாக, நடிகர் சித்தார்த் தனது பிரஸ்மீட்டை நிறுத்தி விட்டு கிளம்பிச் சென்றார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதைக் கண்டித்துள்ளனர். கன்னட நடிகர் சிவராஜ் குமார் இதுகுறித்துக் கூறுகையில், பிரஸ் மீட் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சித்தார்த் கன்னட அமைப்பினர் எதிர்ப்பால் வெளியேற்றப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. எல்லா மொழி படங்களையும் பார்க்கக் கூடியவர்கள் கன்னட மக்கள். அவர்கள் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன் என கூறினார்.
பிரகாஷ்ராஜ் கண்டனம்
இதேபோல நடிகர் சித்தார்த்திடம் கன்னட அமைப்பினர் தகராறு செய்ததை கண்டித்து நடிகர் பிரகாஷ் ராஜும் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவிட்டு உள்ளார்.
நீண்ட காலமாக தொடரும் காவிரி பிரச்சனையை தீர்க்காத மத்திய அரசு, அரசியல் தலைவர்கள், நெருக்கடி தராத எம்பிக்களிடம் கேள்வி கேட்காமல் சித்தார்த் போன்ற நடிகருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது. ஒரு
கன்னடராக கன்னட மக்கள் சார்பாக மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}