கன்னட நடிகரின் 45 வயது மனைவி திடீர் மரணம்.. பாங்காக் சென்றவருக்கு மாரடைப்பு!

Aug 07, 2023,01:25 PM IST
பெங்களூர்: கன்னட நடிகரான விஜய ராகவேந்திராவின் மனைவி ஸ்பாந்தனா, பாங்காக் சென்றிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தவர் என்று கூறப்படுகிறது.

பாங்காக் நகருக்கு அவர் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

தனது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சுற்றுலா போயிருந்தார் ஸ்பாந்தனா.  போன இடத்தில் அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தை சந்தித்துள்ளார். ஸ்பாந்தனாவின் உடல் நாளை பெங்களூருக்குக் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.



ஸ்பாந்தனாவின் தந்தை பி.கே.சிவராம், காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 2007ம் ஆண்டு ஸ்பாந்தனாவுக்கும், விஜய ராகவேந்திராவுக்கும் திருமணம் நடைபெற்றது.  விஜய ராகவேந்திரா தற்போது பாங்காக்கில்தான் இருக்கிறார். 

நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த திடீர் மாரடைப்பால் பலரும் அகால மரணத்தைச் சந்தித்துள்ளனர். கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரும் இப்படித்தான் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். ஸ்பாந்தனாவின் மரணச் செய்தி கன்னடத் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்