ஹைதராபாத்: கண்ணப்பா திரைப்படத்தில் பிரபாஸ், மோகன்லால் உடன் இணைந்துள்ளார் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பா திரைப்படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்னர் தான் போடப்பட்டது. தற்பொழுது முதல் கட்ட படப்பிடிப்பு நியூசிலாந்து நாட்டில் தொடங்கி உள்ளது.
பான் இந்தியா படமான இதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ், கம்ப்ளீட் ஆக்டர் என்று அழைக்கப்படும் மலையாளத்து மோகன்லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரும் இந்த மெகா கூட்டணியில் தற்பொழுது இணைந்துள்ளார்.
கண்ணப்பா திரைப்படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருவதால், இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது எனலாம்.
இந்த காவிய திரைப்படத்தை உயிர்பிக்கும் நிலையில் தயாரிப்பு துறையினர் ரெடியாகி வருகின்றனர்.
சிவ மெச்சிட கண்ணப்பா என்ற கன்னடத் திரைப்படத்தில் தின்னா -அர்ஜுனா கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்தது, தற்போது கண்ணப்பாவில் அவருக்கான முக்கியத்துவத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் சிவராஜ்குமார் தலைசிறந்த பங்களிப்பை தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஸ்டார் பிளஸ்சில் மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இப்படத்தை இயக்குகிறார். கண்ணப்பா திரைப்படம் இந்திய திரையுலகில் கதை சொல்லலை மறுவரையறை செய்வதோடு மட்டுமல்லாமல், கண்ணப்பாவின் அசாதாரணக் கதையையும், சிவபெருமான் மீதான அவரது அசைக்க முடியாத பக்தியையும் விவரிக்கும் காவியமாக உருவாகி வருகிறது.
ஏற்கனவே ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் இணைந்திருந்தனர். இப்போது தெலுங்குப் படத்தில் கை கோர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!
திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!
கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!
Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?
விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது
சிறுநீரக கற்களைத் தடுக்கலாம்.. கவலைப்படாம.. இதைக் கொஞ்சம் பாலோ பண்ணிப் பாருங்க
இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.520 உயர்வு!
{{comments.comment}}