- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
காலங்கள் கடந்தாலும், காவியமாய் வாழும் .
கண்ணதாசன் என்னும் கவிஞனின் நாமம்.
காலங்கள் மாறும். காட்சிகள் மறையும் .
கண்ணதாசனின் கவிகள் என்றும் நிலைக்கும்.
காலத்தை வென்ற கவிஞன் இவன்.
காலத்தால் அழியாதவை இவன் கவிகள்.
காதல் சுவை கொட்டும் இவன் கவிதை .
காவியமாகும் இவன் கவி படைப்புகள்.
இவன் கவிதைகளில் சந்தங்கள் விளையாடும்.
இவன் எழுத்தில் சொற்கள் நடனமாடும்.

வாழ்க்கை பற்றிய ஆழமான சிந்தனைகளை,
வரிந்து எழுதிய , வாழ்க்கை சித்தர்.
நம்பிக்கையும், நகைச்சுவையும், கலந்த நாயகன்.
நயமிக்க இனிய பாடலுக்கு சொந்தக்காரன்.
பாட்டாலே உலகத்தை ஈர்த்தவன் அவன்.
படைப்புகளால் மனித மனங்களை மகிழ்வித்தவன்.
சாமானிய மக்களின் மனதில் பதிந்தவன்.
சாகித்திய அகடாமி விருதுபெற்ற கவிஞன்.
அர்த்தமுள்ள இந்து மதத்தின் நூலாசிரியர்.
ஆன்மீக தேடலில் வழிகாட்டி அவர்.
தமிழ் மொழிக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம்.
திரைப்படத் துறையில் தனக்கென தனிஇடம் பதித்தவர்.
காலத்தை வென்ற ஒரு கவிஞன் .
கண்ணதாசன் நாமம் என்றும் நம் நினைவில்.
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}