மிரட்டலான "காந்தாரா சாப்டர் 1" பர்ஸ்ட் லுக்.. அதை விட டீஸர் செம அசத்தல்!

Nov 27, 2023,06:02 PM IST

பெங்களூரு: ரிஷப் ஷெட்டி மற்றும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் இணைந்து காந்தாரா சாப்டர் 1 படத்தை கொடுக்கவுள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், ஃபர்ஸ்ட் லுக்கிற்கான பிரத்யேக டீசரும் தற்பொழுது பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளது.


காந்தாரா - சாப்டர் 1 திரைப்படம் 2024ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரத்யேகமாக குறிப்பிடும் வகையில் ஏழு வெவ்வேறு இசை ராகங்களுடன் டீசர் உருவாக்க்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் தற்போது முழுமையாக வெளியிடப்படவில்லை என்றாலும், படத்தின் முதல் தோற்றம், வித்தியாசமான உலகை இந்தப் படம் காட்டப் போவதை உறுதி செய்வதாக உள்ளது. 




திரை ரசிகர்களுக்கு புது விதமான அனுபவத்தை இப்படம் அளிக்கும் என்று நம்பலாம். கதையின் நாயகனான ரிஷப் ஷெட்டியின் கதாபாத்திரம் சஸ்பென்ஸ் நிறைந்ததாக உள்ளது. ஏற்கனவே வந்த முதல் படத்தை விட இது மிரட்டலாக இருக்கும் என்று நம்பலாம்.


காந்தாரா படத்தின் முதல் பாகத்தில் இடம் பெற்ற அதே கர்ஜனை இந்த டீசரிலும் இடம் பெற்றுள்ளது.  காந்தாரா கடந்த ஆண்டு இந்தியத் திரை உலகை புயல் போல் தாக்கியது. மனித குலத்திற்கும், இயற்கைக்கும் இடையிலான சிக்கலான தொடர்பை ஆராயும் அதன் நாட்டுப்புற பாணியிலான கதையாடல் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 


ஹோம்பலே ஃபிலிம்ஸ் கடந்த ஆண்டில் மாபெரும் வெற்றி பெற்ற 'கேஜிஎப் அத்தியாயம் 2' மற்றும் 'காந்தாரா' ஆகிய இரண்டு மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட்டுகளுடன் உலக அளவில் 1600 கோடி ரூபாயை மொத்தமாக வசூலித்தது. வரவிருக்கும் வெளியீடான 'சலார்' ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகவும் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முன்னோட்டம் டிசம்பர் ஒன்றாம் தேதியன்று வெளியாகவுள்ளது. இந்த நிலையில் காந்தாரா சாப்டர் 1 அட்டகாசமான டீசருடன் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்