பெங்களூரு: கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட்டில்தான் சீட் கிடைக்கும் என்று பெரும்பாலான எக்சிட் போல் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கர்நாடகத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டசபைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியை காங்கிரஸ் பெற்றது. பாஜகவுக்கு பெரும் தோல்வியே கிடைத்தது. தேர்தல் வெற்றிக்குப் பின்னர் மகளிர் இலவசப் பேருந்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் கொண்டு வந்தது.
ஆனால் இன்று வெளியான எக்சிட் போல் முடிவுகளைப் பார்த்தால் பெரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும்தான் மிஞ்சுகிறது. அதாவது சிங்கிள் டிஜிட்டில்தான் காங்கிரஸுக்கு அங்கு வெற்றி கிடைக்கும் என்று எக்சிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. கிட்டத்தட்ட எல்லா எக்சிட் போல் முடிவுகளுமே அப்படித்தான் சொல்லியுள்ளன. அதாவது சொல்லி வைத்தாற் போல அத்தனை பேரும் ஒரே மாதிரி சொல்லியுள்ளனர்.
இந்தியா டுடே எக்சிட் போல் கணிப்பில், காங்கிரஸ் (3-5) , பாஜக (20-22) கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்என் நியூஸ் 18 கணிப்பில், காங்கிரஸ் (3-5), பாஜக (23-26) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜான் கி பாத் கணிப்பில் - காங்கிரஸ் (5-7) , பாஜக (21-23) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏபிபி சிவோட்டர் கணிப்பில், காங்கிரஸ் (3-5) , பாஜக (23-25) என்று சீட்டுகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியுடன் இருப்பதாக கணிக்கப்படுகிறது. மேலும் பாஜக தனது பலத்தை இன்னும் முழுமையாக இழக்கவில்லை என்றும் ஊகிக்க முடிகிறது.
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}